கத்திக்குத்து சம்பவத்தில் வாலிபருக்கு 3 ஆண்டு ஜெயில்
Oplus_16908288
தூத்துக்குடியைச் சேர்ந்த நேக்சன் (வயது 20) என்பவர் கடந்த 2024ம் ஆண்டு தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவரிடம் தகராறு செய்து கத்தியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை செய்து குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் – III ல் நடைபெற்று வந்தது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி த விஜயராஜ்குமார் 29.01.2026 அன்று தீர்ப்பு வழங்கினார்.
குற்றம் சாட்டப்பட்ட நேக்சன் குற்றவாளி என தீர்ப்பளித்து 3 வருடங்கள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 500/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுனில், இவ்வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த வடபாகம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் வடபாகம் காவல் நிலைய காவல்துறையினர், அப்போதைய வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் கண்ணன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் பாராட்டினார்.







