திட்டங்குளம் ஊராட்சியில் சாலையை சீரமைக்க சார் ஆட்சியரிடம் தமாகா கோரிக்கை

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமாகா இளைஞரணி தலைவர் கனி தலைமையில் தமாகா வடக்கு மாவட்ட தலைவர் ராஜகோபால், ம பொருளாளர் செண்பகராஜ், செயலாளர் அய்யாத்துரை, இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளர் பொன்ராஜ், மாவட்ட நிர்வாகி சக்திவேல், ஒன்றிய நிர்வாகி பாரதி மற்றும் கோவில்பட்டி அருகே திட்டங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட முத்துநகர் பகுதியை சேர்ந்த மக்கள் சார் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர்.
அவர்கள் சார் ஆட்சியர் ஹூமான்ஷூ மங்களிடம் வழங்கிய மனுவில்,கூறி இருந்ததாவது:-

“கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் திட்டங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட முத்துநகர் பல்லக்கு சாலையில் உள்ள தேவேந்திர குல வேளாளர் திருமண மண்டபத்தில் இருந்து கீழ்புறம் 3 தெருக்கள் உள்ளன. அந்த தெருக்களில் தார்ச்சாலை அமைத்து 20 ஆண்டுகளுக்கு மேலாகிறது.
இதனால் தார்ச்சாலை பழுதடைந்து, பள்ளங்கள் உருவாகி இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டள்ளது. மழைக்காலங்களில் நீர் தேங்கி மக்கள் நடமாடக்கூட முடிவதில்லை. இதனால் அப்பகுதி மக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மிகவும் சிரமத்தை சந்திக்கின்றனர். இந்த தெருக்களில் வாறுகால் வசதியும் செய்து தரப்படவில்லை. இதன் காரணமாக இப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பு வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்த குழாய் வழியாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதனால் குடிநீர் குழாய் காட்சிப்பொருளாகி உள்ளது.

எனவே, பல்லக்கு சாலையில் உள்ள தெருக்களில் வாறுகால் வசதியுடள் கூடிய சாலை அமைத்து தர வேண்டும். வீடுகளுக்கு வழங்கப்பட்ட குழாய் இணைப்புகள் வழியாக குடிநீர் விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.







