ஒன்றிய அளவிலான விளையாட்டு போட்டிகள்: நாகலாபுரம் பள்ளி மாணவிகள் சாதனை
தமிழ்நாடு விளை யாட்டு மே ம்பாட்டு ஆணை யத்தின் மூலம் 16 வயது முதல் 35 வயது உள்ள பெ ண்களுக்கான ‘முதலமைச்சர் விளையாட்டு திருவிழா’இது நம்ம ஆட்டம் 2026’
ஒன்றிய அளவிலான விளை யாட்டுப்ப ோட்டிகள் புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 3 நாட்கள் நடைபெற்றது. இதில் நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அதிக அளவில் கலந்து கோண்டு கேரம் இரட்டையர் பிரிவில் முதலிடம், கையுந்து பந்து விளை யாட்டில் இரண்டாம் இடம், கபடி விளை யாட்டில் முதலிடம், கயிறு இழுக்கும் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றனர்,.

மேலும் 100 மீட்டர் ஓட்டத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். இந்த வெற்றிகள் மூலம் மொத்தம் ரூ74 ஆயிரம் ரொக்கப்பரிசு பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்
பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர். ராமராஜ் வழங்கினார். விழாவிற்கு திட்ட வட்டார ஒருங்கிணை ப்பாளர் தினகரன், மேலாளர் மகாராஜா, புதூர் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தெய்வமுத்து ,நாகலாபுரம் அரசு கல்வி கல்லூரி இயக்குநர் ஆல்டரின்,சாமி அய்யா நாடார் மே ல்நிலை ப்பள்ளி உடற்கல்வி ஆசிரியை நர்மதா உள்ளிட்டோர் கலந்து க கொண்டனர்.
ஒன்றிய அளவில் அரசு நடத்திய அனை வருக்குமான போட்டிகளில் வென்று சாதனை படைத்த மாணவிகளை , பள்ளி நிர்வாகத்தினர், தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரிய, அலுவலர்கள் பாராட்டினர்.







