காந்தியடிகள் நினைவு தினம்: சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்பு
பிரிட்டிஷ் அரசை எதிர்த்து இந்திய நாட்டின் விடுதலைக்காக அகிம்சா வழியில் மதவெறி மற்றும் தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக போராடிய அண்ணல் காந்தியடிகள் நினைவு நாள் இன்று(ஜனவரி 30) கடைபிடிக்கப்பபடுகிறது.
இதை முன்னிட்டு கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் உள்ள காந்தி உருவச்சிலைக்கு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்துப்பட்டது.

கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் க.தமிழரசன் தலைமையில் தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு நிர்வாகி மேரிஷீலா காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்தார்.
பின்பு நடந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் மாநில துணை தலைவர் அபிராமிமுருகன், மாநில குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஜெயஸ்ரீ கிருஷ்டோபர் மாவட்ட குழு உறுப்பினர் ராமலட்சுமி, சங்கர், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகிகள் நல்லையா, மோகன், ஞானம், மக்கள் நீதி மய்யம் ராதாகிருஷ்ணன், மனித நேயம் மக்கள் கட்சி செண்பகராஜ், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்து குமார், ஜெகநாதன், வழக்கறிஞர் முத்துக்குமார், தமிழ்நாடு காமராஜர் பேரவை நாஞ்சில் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.







