கோவில்பட்டி மீனாட்சி அம்மன் கோவில் வருஷாபிஷேக விழா; 31 ந்தேதி நடக்கிறது
கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட மீனாட்சியம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவில் வருஷாபிஷேக விழா 31.1.2026 சனிக்கிழமை, நடக்கிறது.
அன்றைய தினம் காலை 7 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், வேதிகார்ச்சனை, வேத பாராயணம், ஸ்ரீமகா கணபதி ஹோமம், ஸ்ரீருத்ர ஹோமம், பரிவார மூர்த்திகளுக்கு மூலமந்த்ர ஹோமம், அஸ்திர ஹோமம், திரவ்யாகுதி, பூர்ணாகுதி மகாபிஷேகம் நடக்கிறது.

காலை 10.35 மணி முதல் 11.30 மணிக்குள் கோவில் விமானகோபுரங்கள், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு வருஷாபிஷேக மகா கும்பாபிஷேகம் நடைபெறும். பூஜை நடத்திக் கொடுப்பவர் சிவஸ்ரீ செல்வம்பட்டர்
மதியம் 12.30 மணிக்கு மேல் .பொன்னம்பல நாடார் கலையரங்கத்தில் அன்னதானம் நடைபெறும்.
இரவு 7 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்துடன் ரிஷபம், அன்னம் வாகனத்தில் திருவீதி உலா நடைபெறும்







