கோவில்பட்டி கல்லூரியில் வடிவமைப்பு சிந்தனை கருத்தரங்கு
கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் “தொழில்முனைவோர் புதுமைகளை இயக்குதல்: வடிவமைப்பு சிந்தனை & தொடக்க வணிக மாதிரிகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. தொழில் துறை தொடர்பு மைய ஒருங்கிணைப்பாளரும், வர்த்தகத் துறை உதவிப் பேராசிரியருமான மா. வைரவன் வரவேற்புரை வழங்கினார்.
நிகழ்ச்சியின் தலைமை உரையை கல்லூரி முதல்வர். மூ.சுப்புலெட்சுமி வழங்கி, மாணவர்கள் புதிய யோசனைகள், வடிவமைப்பு சிந்தனை மற்றும் தொடக்க தொழில் மாதிரிகள் குறித்து ஆழ்ந்த புரிதலை பெற வேண்டும் என அறிவுறுத்தினார்.

சுயநிதிப் பாடப்பிரிவுகளின் இயக்குநர் பா.மகேஷ்குமார் மற்றும் உள் தர உறுதிப் பிரிவு ஒருங்கிணைப்பாளர். ரா. வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி, தொழில் முனைவு கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்தனர்.
முதன்மை விருந்தினரை வர்த்தகத் துறை, துறைத்தலைவர் செ. பழனிக்குமார் அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மேல்மருவத்தூரில் அமைந்துள்ள லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கோ. ராஜசேகர் கலந்து கொண்டு உதவிப் பேராசிரியர் “தொழில் முனைவோருக்கான வடிவமைப்பு சிந்தனை” மற்றும் “தொடக்க வணிக மாதிரி புதுமை” என்ற தலைப்பில், முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்
மற்றும் மாணவர்களின் கேள்விகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியரும், தொழில் துறை தொடர்பு மைய உறுப்பினருமான எம். மாரிச்சாமி நன்றி கூறினார்.
“நிமிர்ந்து நில்” ஹேக்கத்தான்”

கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் தமிழ்நாடு அரசின் “நிமிர்ந்து நில்” ஹேக்கத்தான் நிகழ்விற்கு மாணவர்களை தயார் படுத்தும் வகையிலான நிகழ்ச்சி நடைபெற்றது. வேலை வாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு கழக ஒருங்கிணைப்பாளரும், வணிக பகுப்பாய்வு துறைத்தலைவருமான பா. கிருபாகரன் வரவேற்புரை வழங்கினார்.
நிகழ்ச்சியின் தலைமை உரையை கல்லூரி முதல்வர் மூ. சுப்புலெட்சுமி வழங்கி, மாணவர்கள் தொழில்முனைவு சிந்தனையுடன் சமூக பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தினார். சுயநிதிப் பாடப்பிரிவுகளின் இயக்குநர் பா.மகேஷ்குமார் வாழ்த்துரை வழங்கி, புதுமை மற்றும் ஆராய்ச்சித் திறன்கள் மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக என்ஸ்குயர் ஹெர்பல்ஸ் நிறுவனர் சத்தியபாமா நாச்சியார் (வடக்கன்குளம்) கலந்து கொண்டு, தனது தொழில்முனைவு அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டு, யோசனை உருவாக்கம் மற்றும் தொழில் தொடக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். முடிவில் ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் சு. பிரவீன் குமார் நன்றியுரை வழங்கினார்.







