திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் இருந்து திரண்டு வந்த அவரது ஆதரவாளர்கள், திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள், சென்னை சி.ஐ.டி காலனி உள்ள இல்லத்தில் கூடினர். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு கனிமொழி மலர் தூவி மரியாதை செலுத்தினர். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் தனது கணவருடன் நேரில் வந்து […]
சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் சென்னையில் கடந்த மாதம் 26-ந்தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். சாலை மறியல், கண்களில் கருப்பு துணி கட்டியவாறும் பல்வேறு வகைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் அருகே உள்ள சிவானந்தா சாலையில் நேற்று, ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் 10-வது நாளாக மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கழுத்தில் […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் கோவில்பட்டி இளையர சனேந்தல் சாலையில் உள்ள கோவில்பட்டி நகர திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. செயற்குழுகூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டார். அவர் பேசுகையில்,” தமிழர் திருநாளான பொங்கல்பண்டிகையை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்டம் முழுவதும் ஒருங்கிணைந்த ஒன்றியம், நகரம், பகுதி அளவில் ஆண் பெண் இரு பாலரும் பங்கேற்கும் வகையில் கபடி, கிரிக்கெட், ஓட்டப்பந்தயம், மிதிவண்டி பந்தயம் என […]
தமிழக சட்டபேரவை முன்னாள் சாபநாயகர் பி எச். பாண்டியன் 6 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை கோவில்பட்டி முத்து நகரில் உள்ள ஏனோக்கு பார்வை மாற்றுத் திறனாளிகள் ஆலோசனை மையத்தில் 50க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு கோவில்பட்டி முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்வின் ராஜ்குமார் சார்பில் மதிய விருந்து அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் , வக்கீல் ராஜேஷ் கண்ணன் ,இசை அமைப்பாளர் ஸ்பர்ஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர் முன்னதாக பி.எச். […]
தென் அமெரிக்கா நாடான வெனிசுலாவின் மீது அமெரிக்க தாக்குதல் நடத்தி அந்நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரா அவரது மனைவி சிலியா புலோரிசையும் கைது செய்ததை கண்டித்து இந்திய கலாச்சார நட்புறவு கழகம் சார்பாக கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் மாவட்ட தலைவர் அபிராமிமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் க.தமிழரசன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்திய கோரிக்ககள் வருமாறு:- *ஐ நா சபையின் சாசனம் மற்றும் வெனிசுலாவின் இறையாண்மையை மீறி […]
சென்னை பெருநகர மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை கடந்த நவம்பர் 15-ம் தேதி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கான காலை உணவு திட்டம் அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் விரிவாக்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி கோவில்பட்டி நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டத்துக்கான முன்னோட்ட நிகழ்ச்சி ராமசாமி தாஸ் பூங்காவில் உள்ள பயிற்சிக்கூடத்தில் நடைபெற்றது. கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி தூய்மை பணியாளர்களுக்கான […]
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, போட்டா ஜியோ ஆகிய அமைப்புகள் போராடி வருகின்றன. இந்த சூழலில் வருகிற 6-ந்தேதியில் இருந்து காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கப்போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளன. இந்த கூட்டமைப்புகளை அழைத்து கடந்த டிசம்பர் 22-ந் தேதி அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே திட்டமிட்டபடி […]
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-எல்லார்க்கும் எல்லாம் என்ற சீரிய சிந்தனையோடு ஆட்சி செய்து வரும் கழகத்தலைவர், வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கழகத்தின் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பொருட்டு , கழகத் துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., தலைமையில் அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, கோவி செழியன், சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசி, எழிலன், முன்னாள் எம்.பி டிகேஎஸ் இளங்கோவன், அப்துல்லா, கார்த்திகேய சிவசேனாபதி, கான்ஸ்டண்டைன் ரவீந்திரன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஜி. சந்தானம், தொழிலதிபர் சுரேஷ் […]
கோவில்பட்டி கோவெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில், செயலர் முனைவர். ப.மகேந்திரன் ஒத்துழைப்புடன் தொழில் தொடர்பு குழு, வேலைவாய்ப்பு குழு மற்றும் புதுமை, புருத்தல் மற்றும் தொழில்முனைவு மேம்பாட்டுதுறை சார்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இயற்பியல் துறை உதவிப்பேராசிரியர்.கி.ரேணுகாதேவி வரவேற்புரை வழங்கினார். வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் ஆரேவதி சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார். கல்லூரி முதல்வர். மூ.கப்புலெட்சுமி குத்துவிளக்கு ஏற்றி தலைமையுரை வழங்கினார். சுயநிதி பாடப்பிரிவு இயக்குநர்.பா.மகேஷ்குமார். மற்றும் கல்லூரி உள் தர உறுதிப்படுத்துதல் துறை ஒருங்கிணைப்பாளர் […]
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-. கடந்த 2025 ஆம் ஆண்டில் கொலை மற்றும் காய வழக்குகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் மீது தனிக்கவனம் செலுத்தி உடனுக்குடன் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறு சிறு பிரச்சனைகளிலும் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்த காரணத்தால் அது மாவட்டத்தின் இதர பகுதிகளுக்கு பரவாமலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமலும் இருந்தது. 2025-ம் வருடம் சட்டம் ஒழுங்கு மிகவும் சிறப்பாக பராமரிக்கப்பட்டது. கடந்த […]







