கோவில்பட்டி நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்
Oplus_16908288

சென்னை பெருநகர மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை கடந்த நவம்பர் 15-ம் தேதி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கான காலை உணவு திட்டம் அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் விரிவாக்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.

அதன்படி கோவில்பட்டி நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டத்துக்கான முன்னோட்ட நிகழ்ச்சி ராமசாமி தாஸ் பூங்காவில் உள்ள பயிற்சிக்கூடத்தில் நடைபெற்றது. கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி தூய்மை பணியாளர்களுக்கான காலை உணவு வழங்குவதை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாக மண்டல செயற்பொறியாளர் சனல்குமார், நகராட்சி ஆணையர் சுகந்தி, சுகாதார அலுவலர் ஹரிகணேஷ், சுகாதார ஆய்வாளர் சந்திரா, சாந்தி மீனா, நகர்மன்ற உறுப்பினர்கள் உலகராணி, கனகலட்சுமி, கருப்பசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.







