வெனிசுலா மீதான அமெரிக்க தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தென் அமெரிக்கா நாடான வெனிசுலாவின் மீது அமெரிக்க தாக்குதல் நடத்தி அந்நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரா அவரது மனைவி சிலியா புலோரிசையும் கைது செய்ததை கண்டித்து இந்திய கலாச்சார நட்புறவு கழகம் சார்பாக கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் மாவட்ட தலைவர் அபிராமிமுருகன் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் க.தமிழரசன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்திய கோரிக்ககள் வருமாறு:-

*ஐ நா சபையின் சாசனம் மற்றும் வெனிசுலாவின் இறையாண்மையை மீறி அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்காவை கண்டித்து ஐக்கிய நாட்டு சபை கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.
*அணிசேரா இயக்கத்தின் உறுப்புநாடான வெனிசுலா மீதான தாக்குதலுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தையும் இந்தியா ஒன்று திரட்ட வேண்டும்
*கைது செய்யப்பட்ட வெனிசுலாவின் அதிபரையும் அவரது மனைவியையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, நிர்வாகிகள் நல்லையா, மோகன், மாடசாமி, சங்கர், நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், INTUC ராஜசேகரன், மகேந்திரன், காங்கிரஸ் கட்சி துரைராஜ், மக்கள் நீதி மய்யம் ராதாகிருஷ்ணன், மனித நேய மக்கள் கட்சி செண்பகராஜ், தமிழ்நாடு காமராஜ் பேரவை நாஞ்சில்குமார், HMS வினோபா பகத்சிங் இரத்ததானக்கழகம் காளிதாஸ், லட்சுமணன், ஆகியோர் கலந்து கொண்டனர்.







