பி. எச். பாண்டியன் நினைவுதினம் : பார்வையற்ற மாற்றுதிறனாளிகளுக்கு மதிய விருந்து
தமிழக சட்டபேரவை முன்னாள் சாபநாயகர் பி எச். பாண்டியன் 6 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை கோவில்பட்டி முத்து நகரில் உள்ள ஏனோக்கு பார்வை மாற்றுத் திறனாளிகள் ஆலோசனை மையத்தில் 50க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு கோவில்பட்டி முன்னாள் அரசு வழக்கறிஞர் செல்வின் ராஜ்குமார் சார்பில் மதிய விருந்து அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் , வக்கீல் ராஜேஷ் கண்ணன் ,இசை அமைப்பாளர் ஸ்பர்ஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்
முன்னதாக பி.எச். பாண்டியன் பெருமைகள் குறித்து மையத்தின் பொறுப்பாளர் அமல்ராஜ் எடுத்து கூறி பார்வை மாற்றுத் திறனாளிகள் உடன் இணைந்து கூட்டு பிரார்த்தனை செய்தார்.







