தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்; அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் கோவில்பட்டி இளையர சனேந்தல் சாலையில் உள்ள கோவில்பட்டி நகர திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
செயற்குழுகூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டார். அவர் பேசுகையில்,” தமிழர் திருநாளான பொங்கல்பண்டிகையை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்டம் முழுவதும் ஒருங்கிணைந்த ஒன்றியம், நகரம், பகுதி அளவில் ஆண் பெண் இரு பாலரும் பங்கேற்கும் வகையில் கபடி, கிரிக்கெட், ஓட்டப்பந்தயம், மிதிவண்டி பந்தயம் என விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கியும், ஊராட்சிகள் வார்டுகள் அளவில் மகளிரை திரட்டி சாதி, மத, ஏற்றத்தாழ்வுபேதம் இல்லாத பொங்கல் வைத்து கொண்டாட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்.எல்ஏ, தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை செயலாளர்கள் ராஜ்மோகன். செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, பொருளாளர் சுசி. ரவீந்திரன், கோவில்பட்டி நகர மன்ற தலைவர் கருணாநிதி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாநிலநெசவாளர் அணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், மாநில பொறியாளர் அணி இணைச் செயலாளர் அன்பழகன், கோவில்பட்டி கிழக்கு நகர செயலாளர் சுரேஷ், ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், செல்வராஜ், மும்மூர்த்தி, என். ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.







