கோவில்பட்டி கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை
கோவில்பட்டி கோவெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில், செயலர் முனைவர். ப.மகேந்திரன் ஒத்துழைப்புடன் தொழில் தொடர்பு குழு, வேலைவாய்ப்பு குழு மற்றும் புதுமை, புருத்தல் மற்றும் தொழில்முனைவு மேம்பாட்டுதுறை சார்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இயற்பியல் துறை உதவிப்பேராசிரியர்.கி.ரேணுகாதேவி வரவேற்புரை வழங்கினார். வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் ஆரேவதி சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார். கல்லூரி முதல்வர். மூ.கப்புலெட்சுமி குத்துவிளக்கு ஏற்றி தலைமையுரை வழங்கினார்.

சுயநிதி பாடப்பிரிவு இயக்குநர்.பா.மகேஷ்குமார். மற்றும் கல்லூரி உள் தர உறுதிப்படுத்துதல் துறை ஒருங்கிணைப்பாளர் .ரா.வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அதனைத் தொடர்ந்து ஒசூரில் உள்ள ஸ்ரீ.சுமுகா நிறுவனத்தின் மேலாளர் தனஞ்செயா, துணை மேலாளர் மகேஷ்குமார், மனித வள பாதுகாப்பு அலுவலர்.ஜெயகாந்தன் ஆகியோர் “தற்போதைய தொழில்துறை அறிவு மற்றும் மாணவர்களை பணியமர்த்துவதில் கவனம்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற வளாக நேர்காணலில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. தொழில் தொடர்பு குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர்.மா.வைரவன் நன்றி கூறினார்.
மன நலம் பற்றிய விழிப்புணர்வு

கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின், கணிதவியல் துறை, இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இளைஞர் நலச் சங்கம் இணைந்து உடல் நலம் மற்றும் மன நலம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு கல்லூரிச் செயலர் ப.மகேந்திரன் வழிகாட்டுதலின் படி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மூ.சுப்புலட்சுமி தலைமையுரை ஆற்றினார். சிறப்பு விருந்தினரை இ.சுசீலா அறிமுகம் செய்தார். இரா.கிருஷ்ணவேணி வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்கவில் டாக்டர் சௌ. சௌபாக்கியா மணிமொழி உடல் நலம் மற்றும் மன நலம் என்னும் தலைப்பில் மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றினார்.

இதற்கான ஏற்பாடுகளை கணிதவியல் துறை உதவிப்பேராசிரியர்கள், இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் நா. சண்முகப்பிரியா, இளைஞர் நலச் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.ஜெயகுரும்பன் ஆகியோர் செய்திருந்தனர். 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.







