கனிமொழி எம்.பி பிறந்தநாள்; அமைச்சர் கீதாஜீவன்,மகளிரணி நிர்வாகிகள் நேரில் வாழ்த்து

திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் இருந்து திரண்டு வந்த அவரது ஆதரவாளர்கள், திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள், சென்னை சி.ஐ.டி காலனி உள்ள இல்லத்தில் கூடினர்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு கனிமொழி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன் தனது கணவருடன் நேரில் வந்து கனிமொழிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், திமுக மகளிரணிச் செயலாளர் ஹெலன் டேவிட்சன், திமுக மகளிர் தொண்டர் அணி செயலாளர் நாமக்கல் ப.ராணி, திமுக மகளிரணி இணைச்செயலாளர் குமரி விஜயகுமார், திமுக மகளிர் தொண்டர் அணி இணைச்செயலாளர் தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ., திமுக மகளிர் அணி மாநில, மாவட்ட நிர்வாகிகள், திமுக தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பூங்கொத்து மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
கனிமொழி எம்.பி., தனது பிறந்தநாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.மார்கண்டேயன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்,







