பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்: தூத்துக்குடி மாவட்டத்தில் 5,41,007 பேர் பயன்பெறுவார்கள்- ஆட்சியர்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழக அரசின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட இருக்கிறது. மொத்தம் 957 நியாயவிலைக் கடைகள் மூலம் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரொக்கத் தொகை ரூ. 3,000 வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் […]







