சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, ரவி மோகன், அதர்வா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு மத்திய திரைப்படத் தணிக்கை குழு 25 மாற்றங்களைச் செய்ய உத்தரவிட்டு, U/A 16+ சான்றிதழ் வழங்கியுள்ளது. அதன்படி, ‘தீ பரவட்டும்’ என்ற காட்சி ‘நீதி பரவட்டும்’ எனவும், ‘இந்தி அரக்கி’ என்ற வசனம் ‘அரக்கி’ எனவும் மாற்றப்பட்டுள்ளது. மேலும், ‘இந்தி என் கனவை அழித்தது’ என்ற வசனம் ‘என் ஒரே […]
கோவில்பட்டி, கோ. வெங்கடசுவாமி நாயுடு (தன்னாட்சி) கல்லூரியின் ஆங்கிலத் திறன் வளர்த்தல் மன்றம், துறைகளுக்கு இடையேயான திறன் சார்ந்த போட்டிகள் “டேலண்ட்பெஸ்ட் -2025” நடத்தின.தொடக்கவிழா நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலர் மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் சுப்புலட்சுமி முன்னிலை வகித்தார். சுயநிதி பாடப்பிரிவுகளின் இயக்குனர் மகேஷ் குமார் சிறப்புரை ஆற்றினார்.இரண்டு நாள் கலாச்சார நிகழ்ச்சிகளில் வினாடி வினா, நடனம், மைம், ஸ்கிட், பாடல், மற்றும் படைப்பு எழுதுதல்; ஆகியவை நடைபெற்றன. 450க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து […]
கோவில்பட்டி கம்மவார் சங்கத்தின் சார்பில் கே. எஸ். அகாடமி என்ற பெயரில் அரசு தேர்வுக்கான பயிற்சி மையம் தொடங்கப்பட உள்ளது. ஜனவரி 21 முதல் செயல்பட இருக்கும் இந்த பயிற்சி மையத்தில் TNPSC – GROUP I,II,IV, VAO, TNUSRB – SI, போலீஸ் தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை குறைந்த கட்டணத்தில் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது. வகுப்புகள் 365 நாட்களும் நடக்கும். […]
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு கடலூரில் இன்று நடைபெற்றது. கட்சியின் பொதுசெயலாளர் பிரேமலதா தலைமை தாங்கினார். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- *வரவிருக்கும் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் மிக முக்கியமான தேர்தல். 2026ஆம் ஆண்டு அமையவிருக்கும் ஆட்சி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ந்து, தொழில்துறையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழும் வகையிலும், அனைத்து தரப்பு மக்களுக்கும் சம […]
2026-ஆம் ஆண்டு- உலகளாவிய ஊட்டச்சத்து வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக மாறியுள்ளது. அமெரிக்காவின் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறை (HHS) மற்றும் விவசாயத் துறை (USDA) இணைந்து வெளியிட்டுள்ள “2025-2030-ஆம் ஆண்டிற்கான அமெரிக்கர்களுக்கான உணவு வழிகாட்டுதல்கள்”, பல தசாப்தங்களாகப் பின்பற்றப்பட்டு வந்த ஊட்டச்சத்துக் கொள்கைகளை முற்றிலுமாக மாற்றியமைத்துள்ளது. “உண்மையான உணவை உண்ணுங்கள்” என்ற எளிய மற்றும் வலிமையான செய்தியுடன், இந்த புதிய வழிகாட்டுதல்கள் ஒரு ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. தலைகீழ் உணவு பிரமிடு […]
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ‘உங்கள் கனவுகளை சொல்லுங்கள்’ திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் முதல்- -அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது; “நாம் ஆட்சிக்கு வந்த காலத்தில் கொரோனா உச்சத்தில் இருந்தது. மகளிர் உரிமைத்தொகை கொடுக்க முடியாது எனக்கூறினார்கள். 1.31 கோடி பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கி வருகிறோம். இலவச பேருந்து பயண திட்டம் செயல்படுத்த முடியாது எனக்கூறினார்கள். அதையும் நிறைவேற்றினோம். 2 லட்சம் கோடி விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கியுள்ளோம். 4000 […]
தமிழக ஜூனியர் ஆக்கி அணி கடந்த ஆண்டு தேசியப் போட்டியில் சிறப்பாக விளையாடியது. இதன் மூலம் இந்திய ஆக்கி அணி பயிற்சி முகாமுக்கு கோவில்பட்டி வீரர்கள் மணிமாறன், அருண் மற்றும் சுபலட்சுமி ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர்தேர்வு பெற்றுள்ள மூவரும் பெங்களூருவில் நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்துகொண்டு திறமையை வெளிப்படுத்தி அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை ஜூனியர் ஆக்கி போட்டியில் இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு பெறுவதற்கு ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி தலைவர் மோகன்ராஜ் அருமைநாயகம், […]
தமிழக அரசு சார்பில் கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் மாணவர்களுக்கு இலவச மடிகணினி வழங்கும் விழா நடைபெற்றது. கல்லூரிச் செயலர் ப.மகேந்திரன் வழிகாட்டுதலின்படி நடந்த இவ்விழாவில் முதல்வர் மூ.சுப்புலெட்சுமி வரவேற்புரையாற்றினார். தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன் தலைமையுரையாற்றினார். சுயநிதிப்பாடப்பிரிவுகளின் இயக்குநர் பா.மகேஷ்குமார் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவரரவித்தார். கோவில்பட்டி, சார் ஆட்சியர்.ஹிமான்சு மங்கள் சிறப்புரை ஆற்றி மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். இவ்விழாவில் 521 இளங்கலை மூன்றாமாண்டு மாணவ, மாணவியர்கள் மடிக்கணினி பெற்று பயனடைந்தனர். […]
இயக்குநர் எச்.வினோத். விஜய்யை வைத்து `ஜனநாயகன்’ படத்தை இயக்கி உள்ளார்.. இப்படமே விஜய்யின் கடைசி படம் என்பதால், இந்த படத்திற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்த திரைப்படம் வருகிற 9-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஜனநாயகன்’ படத்திற்கான அனைத்து பணிகளையும் முடித்து, படத்தை கடந்த மாதம் தணிக்கை வாரியத்திற்கு படக்குழு அனுப்பியது. ஆனால் இந்த படத்திற்கு இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. இதனால் ஜனவரி 9-ந்தேதி […]
தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளரஅருளப்பன் தலைமையில் சார்பு ஆய்வாளர். முத்துராஜா, சிறப்பு சார்பு ஆய்வாளர் சிவன் மற்றும் போலீசார் நேற்று (07.01.2026) ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில் பிள்ளைவிளை சந்திப்பு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த தூத்துக்குடியை சேர்ந்த ராஜேஷ் (39) மற்றும் பிரான்சிஸ் (22) ஆகியோரை சோதனை செய்ததில் அவர்கள் கஞ்சா ஆயில் வைத்திருந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார், 2 நபர்களையும் தாளமுத்துநகர் காவல் நிலையம் […]







