கோவில்பட்டி கல்லூரியில் 521 மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி
தமிழக அரசு சார்பில் கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியில் மாணவர்களுக்கு இலவச மடிகணினி வழங்கும் விழா நடைபெற்றது. கல்லூரிச் செயலர் ப.மகேந்திரன் வழிகாட்டுதலின்படி நடந்த இவ்விழாவில் முதல்வர் மூ.சுப்புலெட்சுமி வரவேற்புரையாற்றினார்.
தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இரவிச்சந்திரன் தலைமையுரையாற்றினார். சுயநிதிப்பாடப்பிரிவுகளின் இயக்குநர் பா.மகேஷ்குமார் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவரரவித்தார்.

கோவில்பட்டி, சார் ஆட்சியர்.ஹிமான்சு மங்கள் சிறப்புரை ஆற்றி மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார். இவ்விழாவில் 521 இளங்கலை மூன்றாமாண்டு மாணவ, மாணவியர்கள் மடிக்கணினி பெற்று பயனடைந்தனர்.
முடிவில் வேதியியல் துறை இணைப்பேராசிரியர், வே.கோமதி சங்கரேஸ்வரி நன்றி கூறினார்,.
அரசு வேலைவாய்ப்பு கருத்தரங்கு

கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (தன்னாட்சி), வணிக பகுப்பாய்வு துறை ,தொழில் வழிகாட்டுதல் மற்றும் வேலைவாய்ப்பு பிரிவு, நிறுவன புதுமை இணைந்து அரசு வேலைவாய்ப்பு தொடர்பான சிறப்பு கருத்தரங்கு நடத்தின,
மின்னணுவியல் துறை உதவிப் பேராசிரியர் இராதாகிருஷ்ணன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் மூ. சுப்புலெட்சுமி தலைமை உரை நிகழ்த்தி, மாணவர்கள் தெளிவான இலக்குடன் தொடர்ந்து முயற்சி செய்தால் அரசு பணிகளில் வெற்றி பெற முடியும் என ஊக்கமளித்தார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி இயக்குநர் பா. மகேஷ்குமார் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக வெற்றி IAS பயிற்சி மையத்தின் கோவில்பட்டி மண்டல இயக்குநர் ஜி. பவானி மனோகர், கூட்டுறவுத் துறை மூத்த ஆய்வாளர் மஞ்சு முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டு அரசு பணித் தேர்வுகளுக்கான தயாரிப்பு முறைகள், நேர மேலாண்மை, மன உறுதி மற்றும் தொடர்ச்சியான பயிற்சியின் அவசியம் குறித்து மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.
இரண்டாம் மற்றும் மூன்றாமாண்டு மாணவர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு தங்கள் சந்தேகங்களை முன்வைத்து விளக்கங்கள் பெற்றனர். முடிவில் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர் ர.அக்சயா நன்றி கூறினார்,
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொழில் வழிகாட்டுதல் மற்றும் வேலைவாய்ப்பு பிரிவு ஒருங்கிணைப்பாளர் பா. கிருபாகரன் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.







