• March 6, 2026

இந்திய ஜூனியர் ஆக்கி அணி பயிற்சி முகாமுக்கு கோவில்பட்டியை சேர்ந்த 2 வீரர்கள், வீராங்கனை தேர்வு

 இந்திய ஜூனியர் ஆக்கி அணி பயிற்சி முகாமுக்கு கோவில்பட்டியை சேர்ந்த 2 வீரர்கள், வீராங்கனை தேர்வு

தமிழக ஜூனியர் ஆக்கி அணி கடந்த ஆண்டு தேசியப் போட்டியில் சிறப்பாக விளையாடியது. இதன் மூலம்  இந்திய ஆக்கி அணி பயிற்சி முகாமுக்கு கோவில்பட்டி வீரர்கள் மணிமாறன், அருண் மற்றும் சுபலட்சுமி ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர்
தேர்வு பெற்றுள்ள மூவரும்  பெங்களூருவில்  நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்துகொண்டு திறமையை வெளிப்படுத்தி அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை ஜூனியர் ஆக்கி போட்டியில் இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு பெறுவதற்கு ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி தலைவர் மோகன்ராஜ் அருமைநாயகம், செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி, பொருளாளர் காளிமுத்து, பாண்டிராஜா தலைமையில் பாராட்டு தெரிவித்தனர் ‘

மற்றும் ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி உறுப்பினர்கள் மாரியப்பன், சுரேந்திரன் , ஈஸ்டர், கிருஷ்ணமூர்த்தி, மனோகரன், திருச்செல்வம் சுரேஷ்குமார், மணிவண்ணன், புகழேந்தி ,முன்னாள் இந்திய ஆக்கி வீரர் அஸ்வின், முருகன், சிவானந்த, சுரேஷ்குமார், மனோஜ் குமார், வேல்முருகன், ஆல்ட்ரின் அதிசயராஜ் ஹெலன் மேரி , மேரி வினோ லோபோ ஆகியோர்  பாராட்டினர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *