கல்லூரி மாணவர்களுக்கான திறன் சார்ந்த போட்டிகள்
கோவில்பட்டி, கோ. வெங்கடசுவாமி நாயுடு (தன்னாட்சி) கல்லூரியின் ஆங்கிலத் திறன் வளர்த்தல் மன்றம், துறைகளுக்கு இடையேயான திறன் சார்ந்த போட்டிகள் “டேலண்ட்பெஸ்ட் -2025” நடத்தின.
தொடக்கவிழா நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலர் மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் சுப்புலட்சுமி முன்னிலை வகித்தார். சுயநிதி பாடப்பிரிவுகளின் இயக்குனர் மகேஷ் குமார் சிறப்புரை ஆற்றினார்.
இரண்டு நாள் கலாச்சார நிகழ்ச்சிகளில் வினாடி வினா, நடனம், மைம், ஸ்கிட், பாடல், மற்றும் படைப்பு எழுதுதல்; ஆகியவை நடைபெற்றன. 450க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அதிக புள்ளிகள் பெற்று முதலாம் இடத்திற்கான சுழற் கோப்பையை கணினி பயன்பாட்டுத் துறை மாணவர்கள் பெற்றனர்
இரண்டாம் இடத்திற்கான சுழற் கோப்பையை புள்ளியியல் துறை மாணவர்கள் பெற்றனர்.
கல்லூரி செயலாளர், முதல்வர், சுயநிதி பாடப்பிரிவுகளின் இயக்குனர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, மாணவர் பிரதிநிதிகள் விக்டோரியா அனி, மதன் பிரசாத், ஜெயச்சித்ரா, கிஷ்ணா, சத்யா, ஜெனிபர், அஜிதா மற்றும் இதர மாணவ மாணவியர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆங்கிலத் திறன் வளர்த்தல் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் ரா. சரவண செல்வ குமார் நன்றி கூறினார்.







