கோவில்பட்டி கம்மவார் சங்கம் சார்பில் அரசு தேர்வுக்கான பயிற்சி மையம்; 21 ம் தேதி தொடக்கம்
கோவில்பட்டி கம்மவார் சங்கத்தின் சார்பில் கே. எஸ். அகாடமி என்ற பெயரில் அரசு தேர்வுக்கான பயிற்சி மையம் தொடங்கப்பட உள்ளது.
ஜனவரி 21 முதல் செயல்பட இருக்கும் இந்த பயிற்சி மையத்தில் TNPSC – GROUP I,II,IV, VAO, TNUSRB – SI, போலீஸ் தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை குறைந்த கட்டணத்தில் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது. வகுப்புகள் 365 நாட்களும் நடக்கும்.

ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி ஆசிரியர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல் முயற்சியிலேயே வெற்றி பெற சிறந்த முறையில் பயிற்சி அளிக்கப்படும். நூற்றுக்கும் மேற்பட்ட தேர்வுகள் நடத்தப்படும்.
டிஜிட்டல் நூலகம், 1000க்கும் மேற்பட்ட புத்தகங்கள், மாதிரி வினா-விடை தாள்கள், வாராந்திரத் தேர்வுகள், மாதிரி தேர்வுகள் நடத்தப்படும்.
கோவில்பட்டி மாதாங்கோவில் தெருவில் உள்ள கம்மவார் சங்க கட்டிடத்தில் இந்த மையம் செயல்பட இருக்கிறது. மேலும் தொடர்புக்கு பி.கோபாலகிருஷ்ணன் (98421 21235) என்பவரை அணுகலாம்.







