கோவில்பட்டி மாநகரில் முதல் முறையாக, கமலா மருத்துவமனையில், 25/12/2025 வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 3 மணிவரை இலவச கல்லீரல் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. பைப்ரோ ஸ்கேன் என்பது உடலில் உள்ள கல்லீரல் சுருக்கத்தை ஆரம்ப நிலையில் கண்டறியும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ஆகும். கீழ்கண்ட பிரச்சினைகளுக்கு ஸ்கேன் பார்க்கலாம்: *மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கல்லீரல் வீக்கம் / சுருக்கம் *குடிப்பழக்கத்தினால் ஏற்படும் கல்லீரல் பாதிப்புகள் கல்லீரல் மற்றும் கணையம் புற்றுநோய் […]
கோவில்பட்டி சொர்ணா நர்சிங் கல்லூரி ஆண்டு விழா மற்றும் கிறிஸ்துமஸ் பெருவிழா செளபாக்யா திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவிற்கு கல்லூரி தாளாளர் ஜெபின் ஜோஸ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் கேக் வெட்டினார். தொடர்ந்து, மாணவிகளுக்கு பரிசு வழங்கி, சிறப்புரையாற்றினார். நோபல் கல்வி நிறுவனங்களின் குழுமம் தலைவர் ஜெரால்ட் ஞானரத்தினம், பொறியாளர்கள் வடிவேல் ராமையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் கடம்பூர் ராஜு […]
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த புரட்டாசி மாதம் முதல் வாரத்தில் மானாவாரி நிலங்களில் உளுந்து, பாசி, கம்பு, வெள்ளைச் சோளம், மக்காச் சோளம், வெங்காயம், மிளகாய், கொத்த மல்லி, சூரிய காந்தி போன்ற பயிர்கள் பயிரிட்டு உள்ளனர். விதைத்தவுடன் பெய்ய வேண்டிய மழை காலதாமதாக பெய்ததால் பயிர்களுக்கு வேண்டிய மேலுரம் மற்றும் களை பறிப்பு, பூச்சிக் கொல்லி மருந்து தெளித்தல் போன்ற பனியை செய்ய நிலத்தில் ஈரப்பதம் இல்லாததால் செய்ய முடியவில்லை. பயிர் முளைத்து 25 நாட்களுக்கு பின் […]
கோவில்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கிறிஸ்துவ சமூகநீதி பேரவை சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா தங்கப்ப நகர் , நந்தவனத் தெருவில் நடைபெற்றது. விழாவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாநில பொறுப்பாளர் தமிழினியன் முன்னிலை வகித்தார். கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, கிறிஸ்துவ ஐக்கிய பேரவை தலைவர் ஆண்ட்ரூஸ், புனித சூசையப்பர் ஆலய பங்கு தந்தை அருள்ராஜ் அடிகளார், கோவில்பட்டி இமாம் டவுன் ஜாமியா சுண்ணத்வல் ஜமாத் […]
கோவில்பட்டியில் தற்காப்பு கலை உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. செல்ப் டிபன்ஸ் அகாடமி ஸ்கூல் ஆஃப் மார்ஷியல் ஆர்ட்ஸ் சார்பில் சவுத் ஆசியா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் நிகழ்ச்சி கோவில்பட்டி காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 120 க்கும் மேற்பட்ட மாணவர்-மாணவிகள் 22 நிமிடம் 47 வினாடிகளில் 3000 குத்துகளை நிகழ்த்தி புதிய உலக சாதனை படைத்தனர். மேலும் 5 வயது சிறுமி மகிழினி கண்களை கட்டியவாறு பாக்சிங் பேக்கில் 10 நிமிடம் 22 வினாடிகளில் […]
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந் தேதி வெளியிடப்பட்டது. அதில் 97 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 66 லட்சம் பேர் இடம் மாறி சென்றவர்களாக காட்டப்பட்டு உள்ளனர். அவர்கள் வாக்காளராக சேர்வதற்கு ஒரு மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 18-ந்தேதி கடைசி நாள். தி.மு.க. சார்பில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்தல் முகவர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. சார்பில் 64 ஆயிரம் முகவர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒரு முகவர், நாளொன்றுக்கு 50 வாக்காளர் […]
தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் தனித்தனியாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் த.வெ.க சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டன் ஓட்டலில் இன்று காலை 10 மணிக்கு (திங்கட்கிழமை) கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.இந்த விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்துகொண்டார். இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றனர். இந்த கிறிஸ்துமஸ் விழாவில் நலத்திட்ட உதவிகளை தவெக தலைவர் விஜய் வழங்கினார். இந்த விழாவில் கியூ.ஆர். குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு […]
கோவில்பட்டியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி புதிய வரைவு வாக்காளர் பட்டியலை வடக்கு மாவட்டச்செயலாளர் சுரேஷ் அனைத்து வாக்குச்சாவடி முகவர்களிடம் பட்டியலை வழங்கி விடுபட்ட நமது கழக உறுப்பினர்கள் பெயர் மற்றும் பொதுமக்கள் பெயரையும் சேர்க்க வாக்குச்சாவடியில் நடைபெறும் முகாமில் உதவுமாறு கேட்டுக்கொண்டார். தொடர்ந்து கேப்டன் விஜயகாந்த் இரண்டாம் ஆண்டு குருபூஜையில் கலந்துகொள்வது சம்மந்தமாக ஆலோசனை நடத்தப்பட்டது. ஜனவரி மாதம் கடலூரில் நடைபெறும் கட்சி மாநாட்டு […]
தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது,. திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழுவின் முதல் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (22/10/2025) நடைபெற்றது. கனிமொழி எம்.பி.தலைமையில் இக்கூட்டம் நடந்தது. இக்குழுவில் இடம் பெற்றுள்ள திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக வர்த்தகர் அணி […]
கோவில்பட்டி கோவில்பட்டி ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் மாதம்தோறும் ஞாயிற்றுக்கிழமைஅன்று கோவில்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள கோவில்களில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த மாத 51 வது அன்னதான நிகழ்ச்சி கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவன நாத சுவாமி திருக்கோவிலில் நடைபெற்றது. கமலேஸ்வரர் மேட்ச் அதிபர் நடராஜன் வரவேற்று பேசினார். தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், மாநில துணை பொதுச்செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் மேற்கு […]







