கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ.வுக்கு ‘கோவில்பட்டியின் எம். ஜி. ஆர்.’ விருது
கோவில்பட்டி சொர்ணா நர்சிங் கல்லூரி ஆண்டு விழா மற்றும் கிறிஸ்துமஸ் பெருவிழா செளபாக்யா திருமண மண்டபத்தில் நடந்தது.
விழாவிற்கு கல்லூரி தாளாளர் ஜெபின் ஜோஸ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் கேக் வெட்டினார்.
தொடர்ந்து, மாணவிகளுக்கு பரிசு வழங்கி, சிறப்புரையாற்றினார்.

நோபல் கல்வி நிறுவனங்களின் குழுமம் தலைவர் ஜெரால்ட் ஞானரத்தினம், பொறியாளர்கள் வடிவேல் ராமையா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் கடம்பூர் ராஜு எம்எல்ஏவுக்கு “கோவில்பட்டியின் எம்ஜிஆர்” என்ற விருது வழங்கப்பட்டது.
ஆசிரியர் இந்துஜா வரவேற்றார். கல்லூரி முதல்வர் சாந்தி ப்ரியா ஆண்டறிக்கை வாசித்தார்.
கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றம் துணைத்தலைவர் திருமலை முத்துசாமி, ரோட்டரி முத்துமுருகன், நடராஜன் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து , கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.







