கோவில்பட்டி கமலா மருத்துவமனையில் இலவச கல்லீரல் ஸ்கேன் பரிசோதனை முகாம்; 25-ந் தேதி நடக்கிறது
கோவில்பட்டி மாநகரில் முதல் முறையாக, கமலா மருத்துவமனையில், 25/12/2025 வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 3 மணிவரை இலவச கல்லீரல் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.

பைப்ரோ ஸ்கேன் என்பது உடலில் உள்ள கல்லீரல் சுருக்கத்தை ஆரம்ப நிலையில் கண்டறியும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ஆகும்.
கீழ்கண்ட பிரச்சினைகளுக்கு ஸ்கேன் பார்க்கலாம்:
*மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கல்லீரல் வீக்கம் / சுருக்கம்
*குடிப்பழக்கத்தினால் ஏற்படும் கல்லீரல் பாதிப்புகள் கல்லீரல் மற்றும் கணையம் புற்றுநோய்
*ஹெபடைடிஸ் B ஹெபடைடிஸ் C வைரஸ் நோய் தொடர்பான இதர பிரச்சனைகள், குழந்தைகள் சார்ந்த கல்லீரல் பிரச்சினைகள்

ஒரு நாளைக்கு 70 முதல் 100 நபர்களுக்கு மட்டுமே கல்லீரல் ஸ்கேன் எடுக்க முடியும் என்பதால், இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் கடைசி நேர ஏமாற்றத்தை தவிர்த்திட முன்பதிவு (அலைபேசி எண்கள்: 94880 46777, 70944 46077) செய்து கொள்ளுங்கள்.என்று மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.







