• October 21, 2026

கோவில்பட்டியில் ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் அன்னதானம்

 கோவில்பட்டியில் ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் அன்னதானம்

கோவில்பட்டி கோவில்பட்டி ராகவேந்திரா சேவா அறக்கட்டளை சார்பில் மாதம்தோறும் ஞாயிற்றுக்கிழமைஅன்று  கோவில்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள கோவில்களில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்த மாத 51 வது  அன்னதான நிகழ்ச்சி கோவில்பட்டி  செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவன நாத சுவாமி திருக்கோவிலில் நடைபெற்றது. கமலேஸ்வரர் மேட்ச்  அதிபர் நடராஜன் வரவேற்று பேசினார். தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், மாநில துணை பொதுச்செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.. கிராம நிர்வாக அலுவலர் மந்திர சூடாமணி பொங்கல் பிரசாதம் வழங்கினார். கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் பாலகிருஷ்ணன் அன்னதான நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார்

நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் பராசக்தி மேட்ச் இண்டஸ்ட்ரிஸ் கிருஷ்ணமூர்த்தி. ஜெயராமன் சுதர்சன் டிரேடிங் கம்பெனி கொல்லம் சேகர் கே கே ஆர் ஸ்வீட்ஸ் ஆக்ரா காளிராஜ். பஜ்ரங் நர்த்தனாலயா கணபதி. ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

சுகாதாரப்பிரிவு துணை  இயக்குனர் மருத்துவர் யமுனா. ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன். தலைவர் ஜெயக்கொடி பொருளாளர் கார்த்திகேயன். மிலிட்டரி சந்திரசேகர். தங்கராஜ். பாண்டியன். பாலமுருகன் சண்முகசுந்தரம். பசுமை இயக்கம் செந்தில். உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விக்னேஸ்வரி என்டர்பிரைசஸ் உரிமையாளர் அசோக் நன்றி கூறினார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *