தன்னம்பிக்கை மிக்கவர்கள் ஆண்களா? பெண்களா? – சிறப்பு பட்டிமன்றம்

கோவில்பட்டி எஸ். எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பாக தன்னம்பிக்கை மிக்கவர்கள் ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார்.. கல்லூரிப் பொருளாளர். கண்ணன் , கல்லூரி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அருண் குமார் ,. ராஜ்மோகன் மற்றும் கல்லூரி முதல்வர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். தமிழ்த்துறை தலைவர் .நா. செல்வம்வரவேற்று பேசினார்..

முன்னாள் தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் நடுவராக இருந்து பட்டிமன்றத்தை வழிநடத்தினார்.. பட்டிமன்றத்தில் தன்னம்பிக்கை மிக்கவர்கள் ஆண்களே என்று . இராசு மற்றும் கிருஷ்ணன் ஆகியோரும், தன்னம்பிக்கை மிக்கவர்கள் பெண்களே என்று தேசிய நல்லாசிரியர் விநாயக சுந்தரி மற்றும். வித்யாபாலாஜி ஆகியோரும் பங்கேற்று பேசினார்கள்.

ஒவ்வொரு பேச்சாளரும் தங்களுக்கே உரித்தான பாணியில் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தி பேசினார்கள். பட்டிமன்ற நிறைவில் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தன்னம்பிக்கையோடு இருக்க வேண்டும். மாணவர்கள் தன்னம்பிக்கையின் அடையாளமாக இருக்க வேண்டும் என்றும் இறுதியாக ஆண்களை விட தன்னம்பிக்கை மிகுதியும் கொண்டவர்கள் பெண்களே என்று நடுவர் ஜான்கனேஷ் தீர்ப்பு வழங்கினார்.
இப்பட்டிமன்றத்தில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்த்துறையின் உதவி பேராசிரியர் ஹரிணிகாஸ்ரீ நன்றி கூறினார்.







