வரைவு வாக்காளர் பட்டியல்: கோவில்பட்டியில் தேமுதிக ஆலோசனை கூட்டத்தில் ஒப்படைப்பு
கோவில்பட்டியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி புதிய வரைவு வாக்காளர் பட்டியலை வடக்கு மாவட்டச்செயலாளர் சுரேஷ் அனைத்து வாக்குச்சாவடி முகவர்களிடம் பட்டியலை வழங்கி விடுபட்ட நமது கழக உறுப்பினர்கள் பெயர் மற்றும் பொதுமக்கள் பெயரையும் சேர்க்க வாக்குச்சாவடியில் நடைபெறும் முகாமில் உதவுமாறு கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து கேப்டன் விஜயகாந்த் இரண்டாம் ஆண்டு குருபூஜையில் கலந்துகொள்வது சம்மந்தமாக ஆலோசனை நடத்தப்பட்டது.
ஜனவரி மாதம் கடலூரில் நடைபெறும் கட்சி மாநாட்டு அழைப்பிதழை நிர்வாகிகளிடம் வழங்கினார்.
கூட்டத்திற்கு கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் காளிதாஸ் முன்னிலை வகித்தார்.மாவட்ட அவைத்தலைவர் கொம்பையாபாண்டியன், செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், நகரச்செயலாளர் நேதாஜி பாலமுருகன், மாவட்ட பொறியாளரணி துணைசெயலாளர் பெருமாள்சாமி, கிரிதரன்,மதிமுத்து, பரமசிவன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்







