விசிக சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா

கோவில்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கிறிஸ்துவ சமூகநீதி பேரவை சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா தங்கப்ப நகர் , நந்தவனத் தெருவில் நடைபெற்றது.
விழாவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாநில பொறுப்பாளர் தமிழினியன் முன்னிலை வகித்தார். கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, கிறிஸ்துவ ஐக்கிய பேரவை தலைவர் ஆண்ட்ரூஸ், புனித சூசையப்பர் ஆலய பங்கு தந்தை அருள்ராஜ் அடிகளார், கோவில்பட்டி இமாம் டவுன் ஜாமியா சுண்ணத்வல் ஜமாத் பள்ளிவாசல் ஹாஜி முஹம்மது ஜமீல் பைஜி, கவுன்சிலர் ஜாஸ்மின் லூர்து மேரி, திமுக சிறுபான்மையினர் பிரிவு அமலி பிரகாஷ், திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சந்தானம் ஆகியோர் பேசினர்.

விழாவில் கேக் வெட்டி வழங்கப்பட்டன. 50 பேருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது. ரோட்டரி சங்க நிர்வாகி வெங்கடேஷ், விழா ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கறிஞர் கனகராஜ், சுல்தான் பாட்ஷா, தாவீது ராஜா, பிரேம்குமார், சூசைமாணிக்கம், தாமஸ், ஆரோக்கியராஜ், ஜோஸ், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை விசிக கிறிஸ்துவ சமூகநீதி பேரவையைச் சேர்ந்த தேவராஜ் செய்திருந்தார்.







