கோவில்பட்டியில் தற்காப்பு கலையில் 5 வயது சிறுமி மகிழினி உலக சாதனை
கோவில்பட்டியில் தற்காப்பு கலை உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. செல்ப் டிபன்ஸ் அகாடமி ஸ்கூல் ஆஃப் மார்ஷியல் ஆர்ட்ஸ் சார்பில் சவுத் ஆசியா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் நிகழ்ச்சி கோவில்பட்டி காந்தி மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 120 க்கும் மேற்பட்ட மாணவர்-மாணவிகள் 22 நிமிடம் 47 வினாடிகளில் 3000 குத்துகளை நிகழ்த்தி புதிய உலக சாதனை படைத்தனர்.

மேலும் 5 வயது சிறுமி மகிழினி கண்களை கட்டியவாறு பாக்சிங் பேக்கில் 10 நிமிடம் 22 வினாடிகளில் 1500 குத்துகளை நிகழ்த்தி புதிய உலக சாதனை படைத்தார்.
நிகழ்ச்சியில் சவுத் ஆசியா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பைச் சேர்ந்த பால விநாயகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஸ்வகர்மா மகாஜன சங்க தலைவர் பாலமுருகேசன் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உலக சாதனை படைத்த மாணவ மாணவிகளை பாராட்டி பரிசுகளை வழங்கி பேசினார்.
நிகழ்ச்சியில், பயிற்சியாளர்கள் ஆனந்தராஜ், செல்வகுமார், அருண் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.







