கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கம் சார்பில் சங்க அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. தொடர்ந்து , வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக கிரிக்கெட் போட்டி நடந்தது. கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கம் சார்பில், வழக்கறிஞர்களுக்கு இடையேயான நடந்த கிரிக்கெட் போட்டியில் முதல் பரிசு வென்ற வக்கீல் பரத் தலைமையிலான அணிக்கு, கோவில்பட்டி வழக்கறிஞர் சங்க தலைவர் சங்கர் கணேஷ் பரிசு கோப்பையை வழங்கினார். 2-ம் இடம் பிடித்த அணிக்கு வழக்கறிஞர் சங்க செயலாளர் சங்கர், 3-ம் இடம் பிடித்த […]
கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (தன்னாட்சி)யில் தேசிய நுகர்வோர் உரிமைகள் தினவிழா தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. அரசு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, தமிழக நுகர்வோர் கல்வி ஆராய்ச்சி நடுவம் மற்றும் எம்பவர் இந்தியா கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி இணைந்து இவ்விழாவை நடத்தின, தேசிய மாணவர் படை மாணவர்களின் அணிவகுப்புடன் விழா தொடங்கியது. தூத்துக்குடி உறுப்பினர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் , எம்பவர் இந்தியா, கௌரவ செயலாளர். […]
தூத்துக்குடியில் உள்ள துறைமுகம், அனல்மின் நிலையம், உப்பளங்கள் மற்றும் ஏராளமான தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். இவர்களை குறிவைத்து சமீப காலமாக ஒரு கும்பல் போலி லாட்டரி விற்பனை செய்து வருகின்றனர். இதற்காக போலியாக ஈ-மெயில் ஐடி, வாட்ஸ் அப் குருப், மற்றும் பல்வேறு பெயர்களின் சமூக வலைதளங்கள் தொடங்கி அதன் மூலம் தொழிலாளர்களிடம் தினசரி ரூ.300 முதல் ரூ.500 வரை பணத்தை பறித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து உரிய விசாரணை […]
பொங்கல் தொகுப்புடன் 5,000 ரூபாய் வழங்க வேண்டும்; அரசுக்கு த.மா.கா. கோரிக்கைவிடுத்து சாமி
கோவில்பட்டி. செண்பகவல்லி அம்மன் கோவில் அருகில் உள்ள தேரடி கருப்பசாமி கோவிலில் அரசுக்கு விடுத்த கோரிக்கை மனுவை மாலையாக தயாரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் என்பி ராஜகோபால் முன்னிலையில் அக்கட்சியினர் அணிவித்தனர்,. தமிழ் மாநில காங்கிரஸ் நகரத் தலைவர் கருப்பசாமி, மாவட்ட பொருளாளர் செண்பகராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் பூல் பாண்டியன், வைரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எட்டையாபுரம் வட்டார தலைவர் முத்து பாண்டியன்.சரவணன் மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் பொன்ராஜ் […]
கோவில்பட்டி 1974-1977 ம் ஆண்டு நாடார் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சங்கம், அரவிந்த் கண் மருத்துவ மனையுடன் இணைந்து ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தி வருகிறது. அந்த வகையில் டிசம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான 28 ம் தேதி கோவில்பட்டி ஆழ்வார் தெருவில் உள்ள செயின்ட் பால்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடக்கிறது. காலை 10 மணி முதல் […]
நீலகிரி மாவட்டத்தில் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் குளிர்காலம் நிலவுகிறது. நவம்பர் மாதத்தில் நீர் பனிப்பொழிவும், அதைத்தொடர்ந்து உறைபனி தாக்கமும் இருப்பது வழக்கம். கடந்த சில வாரங்களாக புயல் காரணமாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. அதோடு மேகமூட்டத்துடன் கூடிய சீதோஷ்ண காலநிலை நிலவி வந்ததாலும், பனியின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. இதனையடுத்து ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக உறை பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் வழக்கத்தை விட குளிர் அதிகமாக இருக்கிறது. […]
அரசு போக்குவரத்து கழக பஸ்களில் தமிழ்நாடு என இல்லாமல் அரசு போக்குவரத்து கழகம் என இருந்து வருவதாக நாம் தமிழர் கட்சி சார்பில் புகார் எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்துக்கு இன்று மாலை வந்த அரசு போக்குவரத்து கழக பஸ்களில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கர்களை நாம் தமிழர் கட்சியினர் ஒட்டினர். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார், உழவர் பாசறை மாரியப்பன், வணிகர் பாசறை ஜெயபாசு, மாநில […]
கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு தன்னாட்சிக் கல்லூரியில் தமிழ்த் துறை சார்பாக காலை 10 மணி அளவில் இணையமும் இன் தமிழும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ் துறைத் தலைவர். சா. தங்க மாரியப்பன் வரவேற்று பேசினார். சுயநிதி பாடப்பிரிவுகளின் இயக்குனர் பா. மகேஷ் குமார் வாழ்த்துரை வழங்கினார். உதவிப் பேராசிரியர் மு. கார்த்திக் ராஜா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். அருப்புக்கோட்டை சைவ பானு சத்திரிய கல்லூரியின் தமிழ் துறைத்தலைவர் இரா. தன […]
தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியை தவிர மற்ற தொகுதிகளுக்கு செயலாளர்கள் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் பதவி சாமுவேல் என்பவருக்கு வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது. இதனால் அதிருப்தி அடைந்த தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளராக இருந்த அஜிதா ஆக்னல் என்ற பெண் நிர்வாகி, தனது ஆதரவாளர்களுடன் பனையூர் அலுவலகத்துக்கு வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து மிகவும் ஆர்வத்துடன் கட்சி பணியாற்றி வந்த அஜிதா ஆக்னல் பல்வேறு கூட்டங்கள் நடத்தி […]
தமிழக பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய மந்திரி பியூஸ் கோயல் சென்னை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து தியாகராயகரில் உள்ள பா.ஜனதா அலுவலகத்திற்கு சென்ற பியூஷ் கோயல் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் நிர்வாகிகளுடன் சட்டமன்ற தேர்தல் பணி குறித்து ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய இணை மந்திரி எல்.முருகன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக தமிழ்நாடு பாஜக தேர்தல் இணை […]







