பொங்கல் தொகுப்புடன் 5,000 ரூபாய் வழங்க வேண்டும்; அரசுக்கு த.மா.கா. கோரிக்கைவிடுத்து சாமி சிலைக்கு மனு மாலையாக அணிவிப்பு

கோவில்பட்டி. செண்பகவல்லி அம்மன் கோவில் அருகில் உள்ள தேரடி கருப்பசாமி கோவிலில் அரசுக்கு விடுத்த கோரிக்கை மனுவை மாலையாக தயாரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் என்பி ராஜகோபால் முன்னிலையில் அக்கட்சியினர் அணிவித்தனர்,.
தமிழ் மாநில காங்கிரஸ் நகரத் தலைவர் கருப்பசாமி, மாவட்ட பொருளாளர் செண்பகராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் பூல் பாண்டியன், வைரம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எட்டையாபுரம் வட்டார தலைவர் முத்து பாண்டியன்.சரவணன் மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் பொன்ராஜ் மாவட்ட பொதுச்செயலாளர் அய்யாதுரை, ஆலோசகர் ஜெயசீலன்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
பொங்கல் தொகுப்பாக பச்சரிசி, முந்திரிபருப்பு, வெல்லம் மற்றும் பனைமரத்தை நம்பி வாழ்பவர்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்தாண்டு பனங்கிழங்கும் சேர்த்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டி கோரிக்கை…
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் பெரிதும் விரும்பி கொண்டாடப்படும் பண்டிகையாகும். இந்த பண்டிகையையொட்டி கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பொங்கல் பரிசுடன் ரூ.1000/- என்று தொடங்கி ஆண்டுதோறும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் வழங்கப்பட்டது.
ஆனால், அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் மு. க. ஸ்டாலின், அதனை ரூ.5000/-ஆக தரவேண்டுமென வலியுறுத்தினார். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து அவர் முதல்வராக பதவியேற்ற காலத்தில் இருந்து பொங்கல் பரிசுத் தொகுப்பில் வழங்கப்பட்ட பொருட்கள் எதுவும் மக்களுக்கு உதவுவதாக இல்லை.

அதிலும், இந்த ஆண்டு பரிசுத் தொகுப்புடன் ரொக்கப்பணம் இல்லையென்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு ஒன்றிய அரசு பணம் தரவில்லையெனவும் விளக்கம் அளித்துள்ளனர். அப்படியென்றால் இதுநாள்வரை ஒன்றிய அரசு தரும் பணத்தில் நீங்கள் ஸ்டிக்கர் ஒட்டி மக்களை ஏமாற்றும் செயலில் ஈடுபட்டீர்களா? என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும்.
மேலும் அனைத்து தரப்பு தமிழ் மக்களுக்கும் பொங்கல் பண்டிகையை இன்புற்று கொண்டாடும் வகையில், தற்போது முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது என்ன கோரிக்கை விடுத்தாரோ அதனை நினைவாக்கும் வண்ணம், ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.5000/- வழங்க வேண்டும்.

இல்லையென்றால், எதிர்க்கட்சிகள் கூறுவது போல், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு, ஆட்சி கட்டிலில் அமர்ந்தவுடன் வேற பேச்சு என்ற குற்றச்சாட்டு கடந்த ஆண்டு நிதர்சனமான நிலையில், இந்தாண்டாவது தாங்கள் சொல்லியதை நிறைவேற்ற வேண்டும் என்று தேவைகள் அறிந்து சேவைகள் செய்யக்கூடிய தேரடி கருப்பசாமியிடம் கோரிக்கை வைக்கின்றோம். கோரிக்கை நிறைவேற அருள் செய்ய வேண்டுகிறோம்..
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.







