கிறிஸ்துமஸ் விழா: கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கம் சார்பில் கிரிக்கெட் போட்டி

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கம் சார்பில் சங்க அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
தொடர்ந்து , வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக கிரிக்கெட் போட்டி நடந்தது.

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கம் சார்பில், வழக்கறிஞர்களுக்கு இடையேயான நடந்த கிரிக்கெட் போட்டியில் முதல் பரிசு வென்ற வக்கீல் பரத் தலைமையிலான அணிக்கு, கோவில்பட்டி வழக்கறிஞர் சங்க தலைவர் சங்கர் கணேஷ் பரிசு கோப்பையை வழங்கினார்.
2-ம் இடம் பிடித்த அணிக்கு வழக்கறிஞர் சங்க செயலாளர் சங்கர், 3-ம் இடம் பிடித்த அணிக்கு பொருளாளர் கோபி ஆகியோர் பரிசுக் கோப்பைகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில், வழக்கறிஞர் சங்க துணை தலைவர் சிவனு பாண்டி, துணைச் செயலாளர் சக்திவேல் முருகன் மற்றும் வழக்கறிஞர்கள் செல்வின் ராஜ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.







