கோவில்பட்டி கல்லூரியில் தேசிய நுகர்வோர் உரிமைகள் தினவிழா

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி (தன்னாட்சி)யில் தேசிய நுகர்வோர் உரிமைகள் தினவிழா தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது.
அரசு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, தமிழக நுகர்வோர் கல்வி ஆராய்ச்சி நடுவம் மற்றும் எம்பவர் இந்தியா கோவில்பட்டி, கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி இணைந்து இவ்விழாவை நடத்தின,

தேசிய மாணவர் படை மாணவர்களின் அணிவகுப்புடன் விழா தொடங்கியது. தூத்துக்குடி உறுப்பினர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் , எம்பவர் இந்தியா, கௌரவ செயலாளர். ஆ.சங்கர் வரவேற்புரையாற்றினார். மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கு.உஷா முன்னிலை வகித்தார்,
. இதனைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர். ஆரவிச்சந்திரன், சார் ஆட்சியர்,.ஹிமான்ஷு மங்கள், கு.உஷா ஆகியோருக்கு கல்லூரி முதல்வர் மூ.சுப்புலெட்சுமி சிறப்பு பரிசு வழங்கி கௌரவித்தார்., மாவட்ட வருவாய் அலுவலர், ஆ.ரவிச்சந்திரன் சிறப்புரைஆற்றினார் கோவில்பட்டி, சார் ஆட்சியர், .ஹிமான்ஷு மங்கள் கருத்துரை நிகழ்த்தினர்.

நியமன அலுவலர், உணவு பாதுகாப்புத்துறை மருத்துவர் அருண் மற்றும் முதல்வர் மூ.சுப்புலெட்சுமி ஆகிய இருவரும் வாழ்த்துரை வழங்கினர். இவ்விழாவில் இளங்கலை மூன்றாமாண்டு, முதுகலை மாணவர்கள் மற்றும் நுகர்வோர் கழக மாணவர்கள் ) கலந்து கொண்டனர்.
நுகர்வோர் கழக மாணவர்கள் நுகர்வோர் பற்றிய விழிப்புணர்வு கண்காட்சியை நடத்தினர்.. கோவில்பட்டி, வட்ட வழங்கல் அலுவலர் சு.சரவணப்பெருமாள் நன்றி கூறிறினார்.







