கோவில்பட்டிக்கு வந்த அரசு பஸ்களில் ‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர்

அரசு போக்குவரத்து கழக பஸ்களில் தமிழ்நாடு என இல்லாமல் அரசு போக்குவரத்து கழகம் என இருந்து வருவதாக நாம் தமிழர் கட்சி சார்பில் புகார் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்துக்கு இன்று மாலை வந்த அரசு போக்குவரத்து கழக பஸ்களில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கர்களை நாம் தமிழர் கட்சியினர் ஒட்டினர்.

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார், உழவர் பாசறை மாரியப்பன், வணிகர் பாசறை ஜெயபாசு, மாநில ஒருங்கிணைப்பாளர் கல்வி மகாராஜா,ரமேஷ்,கனி, ராதாகிருஷ்ணன், செண்பகபாண்டியன், முகிலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.







