தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்பட 10 மாநிலங்கள், புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களில் கடந்த நவம்பர் மாதம் 4-ந் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) தொடங்கின.இந்தப் பணிகள் இம்மாதம் (டிசம்பர்) 4-ந் தேதி முடிவடைய இருந்த நிலையில், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்ததால், படிவங்களை பூர்த்தி செய்து வழங்க 2 முறை கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்தப் பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த 19-ந் தேதி தமிழகத்தில் வரைவு […]
கோவில்பட்டியில் அய்யப்ப மண்டல பூஜை: பக்தர்கள் சாப்பிட்ட இலையில் அங்கபிரதட்சணம் செய்து நேர்ச்சை
கோவில்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் லோக்வீர் ஐயப்ப சேவா சங்கம் சார்பில் மண்டல பூஜை விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு மண்டல பூஜை விழாவை முன்னிட்டு ஸ்ரீ ஹரிஹர புத்திர ஐயப்ப சுவாமிக்கு உற்சவர் சன்னதி முன்பாக சகஸ்கர நாம அர்ச்சனை நடந்தது. கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்து வருவதால், கோவில் முன்புள்ள காயத்ரி மண்டத்தில் ஐயப்ப விக்ரகம் வைக்கப்பட்டு, விசேஷ பூஜையும் ஹோமமும் மகா அன்னதானமும் நடந்தது. […]
தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றபிறகு கோவில்பட்டி நகருக்கு முதல் முறையாக வந்தார். இனாம் மணியாச்சி சாலையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது, த. வெ. க. நிர்வாகிகள் ஜேசிபி மூலம் மலர்தூவி மலர் கிரிடத்தை நகரச்செயலாளர் செந்தில் மற்றும் மாவட்ட பெருளாளர் செல்வின் சுந்தர் தலைமையில் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியத்திற்கு அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து நகரில் உள்ள தலைவர்களின் சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார் . 2026 […]
தமிழ்நாடு தேவேந்திரகுல மத்திய மாநில அரசு ஊழியர்கள் சங்கத்தின் 4-வது மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் கோவில்பட்டி எட்டையபுரம் ரோட்டில் உள்ள ரத்தினவேல் மகாலில் நடந்தது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் ரமேஷ்குமார், செயலாளர் செல்லத்துதுரை, பொருளாளர் ஈஸ்வரன், மாநில மகளிரணி தலைவி மீனா, செயலாளர் சாந்தி ஆகியோர் தலைமை தாங்கினர்.. மாநில துணைச் செயலாளர் அந்தோணிராஜ் முன்னிலை வகித்தார். வட்டாட்சியர் செல்வக்குமார் வரவேற்றார். முன்னாள் மாநில தலைவர் சண்முகசுந்தர் “சங்கத்தின் கடந்த காலம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். வழக்கறிஞர் […]
ஜி கே வாசன் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாக செண்பகவல்லி அம்மன் பூவனநாதசுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் ஆராதனை நடைபெற்றது வடக்கு மாவட்ட தமாகா தலைவர் என்.பி. ராஜகோபால் தலைமை தாங்கினார் மாவட்ட பொருளாளர் ஜி செல்வராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் திருமுருகன் மாரி முத்துராமலிங்கம் கயத்தாறு வட்டாரத் தலைவர் பூல் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கோவில்பட்டி நகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் […]
முதலமைச்சருக்கு இருக்கக்கூடிய வேலைப்பளுவில், எடப்பாடி பழனிசாமியோடு எல்லாம் விவாதிக்க முடியாது; கனிமொழி எம்.பி.
திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம். பி. செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- நாடு முழுவதும் கிராமப்புறங்களில் வசித்து வரும், வேலை செய்து வரும் மக்களுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம்தான் 100 நாள் வேலைவாய்ப்பு என்று நாம் சொல்லக்கூடிய கிராமப்புற வேலை உறுதி திட்டம். இந்த திட்டம், பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, நாடு முழுவதும் கிராமப்புற மக்களுக்கு உரிய முறையில் உறுதி செய்யப்படவில்லை. அதிகபட்சமாக 40 நாட்கள் வேலை மட்டுமே வழங்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இன்று அந்த […]
கடந்த ஜூலை மாதம் 24ஆம் தேதி, தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம், வல்லநாடு மாதிரிப் பள்ளியில், மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்கான கட்டணமில்லா AI பயிற்சித் திட்டத்தை கனிமொழி கருணாநிதி எம்.பி. தொடங்கி வைத்தார். அப்போது, மாணவ–மாணவிகள், இதுவரை ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடி அருங்காட்சியகங்களை பார்வையிடவில்லை; அங்கு அழைத்துச் செல்ல வேண்டும் என கனிமொழி எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்தனர். மாணவர்களின் அந்த கோரிக்கையை ஏற்று, (24/08/2025) அன்று மாவட்ட மாதிரி பள்ளிக்குச் சென்ற கனிமொழி கருணாநிதி எம்.பி, 4 பேருந்துகளில் 200 […]
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- நேற்று கள்ளக்குறிச்சியில் மேடை ஏறி ஓபன் சேலஞ்ச் விடுத்த மைச்சரே… நீங்கள் மேடை போட்டு பேசிய அந்த கள்ளக்குறிச்சி மாவட்டமே எனது தலைமையிலான அதிமுக ஆட்சியில் தான் உருவானது என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா? நீங்கள் நின்றுப் பேசிய அதே கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி சொல்லும், அஇஅதிமுக ஆட்சியின் சாதனை என்னவென்று! அஇஅதிமுக ஆட்சியின் திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டி ஸ்டிக்கர் ஒட்டுவதையே […]
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா நிலக்கோட்டை பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு சார்பாக பள்ளபட்டியில் மகளிர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ராஜாராம் தலைமையில் நடைபெற்றது. தமிழக நதிகள் பாதுகாப்புக் குழு மாநில பொறுப்பாளர் அண்ணாதுரை முன்னிலை வைத்தார். மாநில ஓட்டுனர் பிரிவு செயலாளர் மணிகண்டன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் நூறாண்டுகளுக்கு மேலாக சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பும், சுதந்திரப் போராட்டத்திற்கு பின்பும் பாதிக்கப்பட்ட உரிமைகள் மற்றும் வேலை வாய்ப்புகளில் முன்னெடுப்பு குறித்த கருத்துரைகள் வழங்கப்பட்டது. […]
ரூ.4,730 கோடி மதிப்பிலான மணல் கொள்ளை: அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையிடம்
லஞ்ச ஒழிப்பு துறையில் அதிமுக சட்டப் பிரிவு இணை செயலாளர் தமிழ்செல்வன் கொடுத்துள்ள புகார் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:கடந்த 2024 ஜூன் 13-ம் தேதி அமலாக்கத்துறை அனுப்பிய அதிகாரப்பூர்வ ஆவணங்களின் அடிப்படையில் தமிழக மணல் குவாரிகளில் மிகப்பெரிய அளவில் சட்டவிரோத நடவடிக்கைகள் நடந்துள்ளது உறுதியாகியுள்ளது. அதாவது, தமிழகத்தில் கடந்த 2021 முதல் 2023 வரை 28 குவாரிகளில் மணல் அள்ளும் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. இதில் சில குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு அதிகாரிகள் சாதகமாக செயல்பட்டுள்ளனர்.அதன்படி, சுரங்கவிதிகள் மற்றும் மத்திய அரசின் […]







