தூத்துக்குடி வடக்கு மாவட்ட தவெக செயலாளர் பாலசுப்பிரமணியனுக்கு கோவில்பட்டியில் வரவேற்பு



தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றபிறகு கோவில்பட்டி நகருக்கு முதல் முறையாக வந்தார்.
இனாம் மணியாச்சி சாலையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது, த. வெ. க. நிர்வாகிகள் ஜேசிபி மூலம் மலர்தூவி மலர் கிரிடத்தை நகரச்செயலாளர் செந்தில் மற்றும் மாவட்ட பெருளாளர் செல்வின் சுந்தர் தலைமையில் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியத்திற்கு அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து நகரில் உள்ள தலைவர்களின் சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார் .
2026 ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் வருங்கால முதலமைச்சர் விஜய் ஆணைக்கேற்ப இரவு பகல் பாராது தேர்தல் பணியாற்றி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கோவில்பட்டி, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கைப்பற்றி விஜய் பொற்கரங்களில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை சமர்ப்பிப்போம் என்று வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்பு நிகழ்ச்சியின் போது நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி சபதம் ஏற்றார்.
மேலும் தனக்கு வரவேற்பு அளித்த தமிழக வெற்றி கழகம் தொண்டர்கள் மத்தியில் வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் பேசுகையில். “ தமிழக வெற்றிக்கழகம் தலைவரும் வருங்கால முதலமைச்சருமான எழுச்சிமிகு தலைவர் விஜய் தற்போது நம்மை நம்பி தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். அனைத்து மக்களுக்கும் தமிழகத்தில் நல்லாட்சி தரக்கூடிய ஒரே தலைவர் விஜய் தான் என வாக்காளர்களுக்கு எடுத்து கூற வேண்டும்” என்றார்.

எஸ். ஐ.ஆர். வாக்கு படிவத்தை முறையாக சேர்க்கின்ற வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் வாக்குச்சாவடியில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளுக்கு வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆலோசனை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின் போது தவெக தூத்துக்குடி வடக்கு மாவட்ட இணைச் செயலாளர் கருப்பசாமி, பொருளாளர் செல்வின் சுந்தர்.
துணைச் செயலாளர்கள் சத்யா சுரேஷ்.பார்த்திபன். செயற்குழு உறுப்பினர்கள் . முனீஸ்வரன். கூடலிங்கம். மனோஜ் காந்தி. வினோத் கண்ணன். அலெக்சாண்டர். மகேஷ்குமார் .சித்ரா. கௌதமி. உஷாராணி. ஜான்சி ராணி மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.







