பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்; தேவேந்திரகுல மத்திய, மாநில அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தல்

தமிழ்நாடு தேவேந்திரகுல மத்திய மாநில அரசு ஊழியர்கள் சங்கத்தின் 4-வது மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் கோவில்பட்டி எட்டையபுரம் ரோட்டில் உள்ள ரத்தினவேல் மகாலில் நடந்தது.
கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் ரமேஷ்குமார், செயலாளர் செல்லத்துதுரை, பொருளாளர் ஈஸ்வரன், மாநில மகளிரணி தலைவி மீனா, செயலாளர் சாந்தி ஆகியோர் தலைமை தாங்கினர்.. மாநில துணைச் செயலாளர் அந்தோணிராஜ் முன்னிலை வகித்தார்.
வட்டாட்சியர் செல்வக்குமார் வரவேற்றார். முன்னாள் மாநில தலைவர் சண்முகசுந்தர் “சங்கத்தின் கடந்த காலம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். வழக்கறிஞர் ராஜேந்திரசோழன் “சங்கத்தின் எதிர்காலம்” என்ற தலைப்பில் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் மகாலட்சுமி சந்திரசேகர், திமுக மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிபட்டி முருகேசன், திமுக மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சந்தனம், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சண்முகராஜ், நகர் மன்ற உறுப்பினர்கள் செண்பகமூர்த்தி, கவியரசன், திட்டங்குளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பாண்டியராஜ், ஆசிரியர் முருக சரஸ்வதி, இசை ஆசிரியை அமலபுஷ்பம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் வருமாறு:-
*-தமிழ்நாடு அரசு ஊழியர்களின் வாழ்வாதார பிரச்சினையான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும்.
*தமிழ்நாடு அரசு பணியிடங்களில் இன்னும் நிரப்பப்படாமல் உள்ள பின்னடைவு காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும்.
*தியாகி இம்மானுவேல் சேகரனுககு சென்னை அண்ணா சாலையிலும், மதுரை மாட்டுத்தாவணி சாலையிலும் முழு உருவ வெண்கல சிலை அமைக்க வேண்டும்.

*மதுரை விமான நிலையத்துக்கு தியாகி இம்மானுவேல் சேகரன் பெயர் சூட்ட வேண்டும்.
*மத்திய பல்கலைக்கழகத்துக்கு ராஜராஜ சோழன் பெயர் சூட்ட வேண்டும்.
*ராஜராஜ சோழன் சதய விழாவை அரசு பொதுவிடுமுறையாக அறிவிக்க வேண்டும்
மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.







