ஜி கே வாசன் பிறந்தநாள்: கோவில்பட்டி கோவிலில் தமாகா சார்பில் சிறப்பு பூஜை
ஜி கே வாசன் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பாக செண்பகவல்லி அம்மன் பூவனநாதசுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் ஆராதனை நடைபெற்றது
வடக்கு மாவட்ட தமாகா தலைவர் என்.பி. ராஜகோபால் தலைமை தாங்கினார் மாவட்ட பொருளாளர் ஜி செல்வராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் திருமுருகன் மாரி முத்துராமலிங்கம் கயத்தாறு வட்டாரத் தலைவர் பூல் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

கோவில்பட்டி நகர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வழக்கறிஞர் கருப்பசாமி இனிப்பு வழங்கினார் நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் விக்னேஷ் ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில் பாண்டியன் சரவணன், நகரச் செயலாளர் ஜான் கென்னடி, வட்டாரத் துணைத் தலைவர் தங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்







