டிஎன்டி ஒற்றை சாதி சான்று வழங்க கோரி உறுதிமொழி எடுத்த மக்கள்
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா நிலக்கோட்டை பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு சார்பாக பள்ளபட்டியில் மகளிர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ராஜாராம் தலைமையில் நடைபெற்றது.
தமிழக நதிகள் பாதுகாப்புக் குழு மாநில பொறுப்பாளர் அண்ணாதுரை முன்னிலை வைத்தார். மாநில ஓட்டுனர் பிரிவு செயலாளர் மணிகண்டன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் நூறாண்டுகளுக்கு மேலாக சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பும், சுதந்திரப் போராட்டத்திற்கு பின்பும் பாதிக்கப்பட்ட உரிமைகள் மற்றும் வேலை வாய்ப்புகளில் முன்னெடுப்பு குறித்த கருத்துரைகள் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் தமிழக அரசு உடனடியாக டிஎன்டி மக்களுக்கு இரட்டைச் சான்றிதழை வழங்குவதை தவிர்த்து டி. என். டி .என்ற ஒற்றைச் சான்றிதழ் வழங்க கோரி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
உறுதிமொழியின் போது டி என் டி எங்கள் உரிமை, கள்ளர் பள்ளிகள் எங்கள் சொத்து, எங்கள் உரிமையை வழங்கினால் மட்டுமே வாக்களிப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்ட போது பரபரப்பு ஏற்பட்டது.
பள்ளபட்டி,சென்னஞ்செட்டி, என். ஊத்துப்பட்டி, அணைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.







