பழைய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அரசுப் பணியிடங்களில் உள்ள காலிப் பணியிடங்களை அவுட்சோர்சிங் மூலம் நிரப்பாமல், படித்த இளைஞர்களைக் கொண்டு நிரந்தர ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மகேந்திர பிரபு தலைமை தாங்கினார். […]
பாமக தலைவராக ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதை அங்கீகரிக்க வேண்டும் என பா.ம.க., – எம்.எல்.ஏ.,க்கள் ஜி.கே.மணி, அருள் உள்ளிட்டோர் அளித்த மனுவை, தலைமை தேர்தல் கமிஷன் நிராகரித்துள்ளது. அதேநேரம், பா.ம.க., தலைவராக, வரும் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் வரை அன்புமணி தொடர்வார் என்ற பொதுக்குழு தீர்மானத்தை, தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ளது. அதனால், பா.ம.க., பெயர், கொடி, சின்னம் ஆகியவை, அன்புமணி தலைமையிலான கட்சிக்கு சொந்தமாகியுள்ளன.இதை எதிர்த்து, ராமதாஸ் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று […]
ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும், தயாரிப்பாளருமான ஏ.வி. எம் சரவணன் வயது மூப்பினால் ஏற்படும் உடல்நல பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் ஏவிஎம் சரவணன் இன்று காலை 5.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 86. இவரது உடல் ஏவிஎம் ஸ்டியோவில் 3 வது தளத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர் மா. சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரராஜா, சென்னை மாநகராட்சி நிலைக்குழு […]
தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் கடற்கரை (வயது 68), வியாபாரி. இவரும், மனைவி வள்ளியம்மாளும் (50) கோவில்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர். வேலாயுதபுரத்தில் உள்ள கருப்பசாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஊருக்குத் திரும்பினர். அவர்கள் கோவில்பட்டி -திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சாலைப்புதூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கார் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன் மனைவி இருவரும் கீழே விழுந்து படுகாயத்துடன் அதே இடந்தில் உயிரிழந்தனர், மேற்கு காவல் நிலையப் போலீசார் […]
கோவில்பட்டி சொர்ணமலையில் இன்று திருக்கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. இம்மலையில் உள்ள கதிர்வேல் முருகன் கோவில் திருக்கார்த்திகையை முன்னிட்டு இன்று காலை 6 மணிக்கு நடைதிறக்கப்பட்டு காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை புண்ணியாக வாசனை பூஜை கும்ப பூஜை சண்முகர் ஜபம் ஆகியவை நடைபெற்றது. காலை 10:30 மணிக்கு மூலவர் கதிர்வேல் முருகனுக்கும் வள்ளி தெய்வானை சமேத கார்த்திகேய சுப்பிரமணியருக்கும் 21வகையான சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம். தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 6 மணிக்கு […]
. தூத்துக்குடி ரஹ்மத்துல்லா புரத்தைச் சேர்ந்த முருகன் மனைவி அமுதா (வயது 41). என்பவர் கடந்த 27ஆம் தேதி இரவு 9.50 மணியளவில் அங்குள்ள ஒரு கடையில் மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த போது மோட்டார் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் அமுதா கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்றுவிட்டார். மேலும் அன்றைய தினம் தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு டெலிபோன் காலனியைச் சேர்ந்த செல்வம் மனைவி கிறிஸ்டி (30) என்பவர் தனது […]
கோவில்பட்டி வேலாயுதபுரம் நாடார் உறவின்முறைச் சங்கத்துக்கு சொந்தமான ஈ.வே.அ.வள்ளிமுத்து தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளிகளின் 69-வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு வேலாயுதபுரம் நாடார் உறவின்முறை தலைவர் மற்றும் பள்ளி செயலாளர் தர்மராஜா தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி, கல்வி மற்றும் விளையாட்டில் சிறப்பிடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் துரை, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தங்கத்தாய் நேன்சி ஆகியோர் […]
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: தமிழகத்தில் 69 லட்சத்துக்கும் அதிகமானோர் பெயர்கள்
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்ட சபை தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது இதற்காக கடந்த நவம்பர் 34-ந்தேதி முதல் வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்கள் வீடு வீடாக வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள 6.41 கோடி வாக்காளர்களில் இதுவரை 6.3 கோடி படிவங்கள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த படிவங்களை பூர்த்தி செய்து வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன்படி ஒவ்வொரு வீட்டிலும் கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்கின்றனர். […]
செங்கோட்டை அரசு வக்கீலாக இருந்தவர் முத்துக்குமாரசாமி. அவர் இன்று காலை தென்காசி நடுபல்க் அருகே உள்ள தனது அலுவலகத்திற்கு வந்தார். அலுவலகத்தில் அவர் இருந்தபோது, கத்தி, அரிவாளுடன் வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டினர். இதில், அவரது முகம், கை, கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து இருசக்கர வாகனங்களில் தப்பி சென்று விட்டனர், ரத்த வெள்ளத்தில் சரிந்துகிடந்த அரசு வக்கீல் முத்துக்குமாரசாமியை அருகில் […]
எட்டயபுரம், விளாத்திகுளம் பகுதியில் காட்டுப்பன்றிகளால் 200 ஏக்கர் மக்காச்சோளம் பயிர்கள் நாசம்; மானாவாரி
விளாத்திகுளம், எட்டயபுரம், புதூர் வேளாண் வட்டாரங்களில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, பாசி, சோளம், கம்பு, வெங்காயம் உள்ளிட்டவற்றை விவசாயிகள் மானாவாரி நிலத்தில் பயிர் செய்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக பன்றிகள், மான்கள் தொல்லையால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்தாண்டும் பன்றிகள் அட்டகாசம் ஆரம்பித்துவிட்டன. அதாவது, இன்று (3.12.25) காலை விளாத்திகுளம் தாலுகா, சிவஞானபுரம் அருகே கே.குமரெட்டையாபுரம் ( கரையான்பட்டி ) கிராமத்தில் விவசாயிகள் தங்களது விவசாய […]







