கோவில்பட்டியில் பைக் மீது கார் மோதியது: கணவன்-மனைவி உயிரிழப்பு
தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் கடற்கரை (வயது 68), வியாபாரி. இவரும், மனைவி வள்ளியம்மாளும் (50) கோவில்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர். வேலாயுதபுரத்தில் உள்ள கருப்பசாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஊருக்குத் திரும்பினர்.
அவர்கள் கோவில்பட்டி -திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சாலைப்புதூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கார் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன் மனைவி இருவரும் கீழே விழுந்து படுகாயத்துடன் அதே இடந்தில் உயிரிழந்தனர்,

மேற்கு காவல் நிலையப் போலீசார் சமபவ இடம் சென்று இறந்து கிடந்த கடற்கரை மற்றும் வள்ளியம்மாள் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து கன்னியாகுமரி மாவட்டம், மணியன்குவி பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் அபிலேஷிடம் விசாரித்து வருகின்றனர்.







