கோவில்பட்டி சொர்ணமலையில் திருக்கார்த்திகை மகாதீபம்
கோவில்பட்டி சொர்ணமலையில் இன்று திருக்கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. இம்மலையில் உள்ள கதிர்வேல் முருகன் கோவில் திருக்கார்த்திகையை முன்னிட்டு இன்று காலை 6 மணிக்கு நடைதிறக்கப்பட்டு காலை 9 மணிக்கு விக்னேஸ்வர பூஜை புண்ணியாக வாசனை பூஜை கும்ப பூஜை சண்முகர் ஜபம் ஆகியவை நடைபெற்றது.
காலை 10:30 மணிக்கு மூலவர் கதிர்வேல் முருகனுக்கும் வள்ளி தெய்வானை சமேத கார்த்திகேய சுப்பிரமணியருக்கும் 21வகையான சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம். தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

மாலை 6 மணிக்கு மேல் திருக்கோவில் வளாகத்தில் வைத்து 23கிலோ எடை கொண்ட வெண்கல சட்டியில் திருக்கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது.
இதில் கோவில்பட்டி சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
இரவு 7 மணி அளவில் கார்த்திகேயர் வள்ளி தேவயானை திருக்கோயில் வளாகத்தில் இருந்து மயில் வாகனத்தில் வீதி உலா புறப்பட்டு கிரிவலப் பாதை வழியாக, பார்க் ரோடு,மெயின்ரோடு, தெற்கு பஜார்,எட்டையாபுரம் வளைவு ரோடு. கதிரேசன் கோவில் ரோடு வழியாக கோவிலை சென்றடைந்தார்.
பூஜைகளை ஹரிஹர பட்டர், அரவிந்த் பட்டர், சுப்ரமணிய பட்டர் ஆகியோர் செய்திருந்தனர்.







