கோவில்பட்டி ஈ.வே.அ.வள்ளிமுத்து பள்ளி ஆண்டு விழா
கோவில்பட்டி வேலாயுதபுரம் நாடார் உறவின்முறைச் சங்கத்துக்கு சொந்தமான ஈ.வே.அ.வள்ளிமுத்து தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளிகளின் 69-வது ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு வேலாயுதபுரம் நாடார் உறவின்முறை தலைவர் மற்றும் பள்ளி செயலாளர் தர்மராஜா தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி, கல்வி மற்றும் விளையாட்டில் சிறப்பிடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் துரை, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தங்கத்தாய் நேன்சி ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர்.
கோவில்பட்டி நாடார் உறவின்முறைச் சங்கம் துணைத்தலைவர் செல்வராஜ், செயலாளர் ஜெயபாலன், திமுக மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு துணை அமைப்பாளர் அமலி பிரகாஷ், நகர்மன்ற உறுப்பினர் லவராஜா, அதிமுக நகரச்செயலாளர் விஜயபாண்டியன்,

அதிமுக நிர்வாகிகள் ராமச்சந்திரன், போடுசாமி, ஆபிரகாம்அய்யாதுரை, மாரியப்பன்,வேல்முருகன், வேலாயுதபுரம் நாடார் உறவின்முறைச் சங்கம் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.







