தென்காசியில் அரசு வக்கீல் வெட்டிக் கொலை : அலுவலகத்தில் புகுந்து தாக்கிய மர்ம நபர்கள்
செங்கோட்டை அரசு வக்கீலாக இருந்தவர் முத்துக்குமாரசாமி. அவர் இன்று காலை தென்காசி நடுபல்க் அருகே உள்ள தனது அலுவலகத்திற்கு வந்தார்.
அலுவலகத்தில் அவர் இருந்தபோது, கத்தி, அரிவாளுடன் வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டினர். இதில், அவரது முகம், கை, கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் ஓடி வருவதற்குள் அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து இருசக்கர வாகனங்களில் தப்பி சென்று விட்டனர்,

ரத்த வெள்ளத்தில் சரிந்துகிடந்த அரசு வக்கீல் முத்துக்குமாரசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக தென்காசி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் முத்துக்குமாரசாமி உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர்.
கொலைக்கான காரணம் தெரியவில்லை. கொலையாளிகள் பற்றி எந்தவித தகவலும் டி தெரியவில்லை. கொலை நடந்த பகுதியில் இருக்கும் சிசிடிவி காமிராக்களில் கொலையாளிகள் பற்றி எதுவும் பதிவாகி இருக்கிறதா என்று போலீசார் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே அரசு வழக்கறிஞர் மீதான கொலைவெறி தாக்குதலை கண்டித்து தென்காசி மாவட்ட வழக்கறிஞர்கள் நெல்லை-தென்காசி பிரதான சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.







