திண்டுக்கல்லில் மாநில அளவில் 34வது குழந்தைகள் அறிவியல் மாநாடு நேற்று நடைபெற்றது. மாநாட்டில் மாநிலம் முழுவதிலும் வந்திருந்த மாணவ, மாணவிகள் சார்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டது. 132 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கபட்டதில் 30 ஆய்வுக் கட்டுரைகள் இந்திய அளவில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டன. இப்போட்டியில் கோவில்பட்டி காந்திநகர் நகராட்சி உயர்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவர்கள் மு.கணேஷ்குமார் மற்றும் கோ. ராகவன் ஆகியோர் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து கலந்து கொண்டு மாநில அளவில் முதல் பரிசு பெற்று […]
ஜே.சி.ஐ.என்று அழைக்கப்படும் ஜூனியர் சேம்பர் இண்டர்நேஷனல் அமைப்பானது இளைஞர்களை தலைமைத்துவம், சமூகபொறுப்பு மற்றும் செயற்பாட்டு திறன்களில் வளர்க்கும் நோக்கத்தில் செயல்படும் அமைப்பு ஆகும். இந்தியாவில் 28 மாநிலங்களில் 28 மண்டலங்களாக ஜே.சி.ஐ. செயல்பட்டு வருகிறது/. 18 வது மண்டலத்தில் இடம்பெற்றுள்ள கோவில்பட்டியில் ஜே,சி.ஐ.அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. அதன்படி கோவில்பட்டி ஜே.சி.ஐ.அமைப்பின் 30-வது விருது இரவு மற்றும் 31 வது ஆட்சி மன்ற குழு பதவி ஏற்பு விழா ஜே.சிபவன் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை […]
கோவில்பட்டி ஜான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 53வது ஆண்டு விழா நகர்மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில் பள்ளி முதல்வர் மரிய செல்வமணி முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக புனித சூசையப்பர் ஆலய உதவி பங்கு தந்தை குழந்தைராஜ் அடிகளார்,விவேக் நர்சரி பள்ளி தாளாளர் காமராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள் ஏஞ்சலா சின்னத்துரை, ஜாஸ்மின் லூர்து மேரி, உலக ராணி ஆகியோர் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு இப்பள்ளியில் பயின்ற பிளஸ் 2 தேர்வில் இப்பள்ளியில் முதல் மூன்று […]
கோவில்பட்டி எஸ். எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள்(எஸ்.எஸ்.டி.எம்) கல்லூரியில் மனநல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார், கல்லூரி குழு உறுப்பினர்கள் அருண்குமார். ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கல்லூரி முதல்வர் செல்வராஜ் வரவேற்று பேசினார்,.சென்னை ராமச்சந்திரா கல்லூரியில் உளவியல் துறையில் பயிலும் மாணவிகள் கிரிபாலா, ஷர்நிதா, சாய் ஸ்மிருதி மற்றும் அனு ஆகியோர் கலந்து கொண்டு `ஸ்டிக்மா தெரபி’ குறித்த விழிப்புணர்வு உரைகளை […]
தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், த.வெ.க.வுடன் கூட்டணி அமைப்பதற்கான பணிகளை தொடங்கியுள்ளதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. விஜய்யுடன், ராகுல்காந்தி தொலைபேசி உரையாடல், அதனை உறுதிப்படுத்தியது. இதனால் தி.மு.க. கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டது.இந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த அகில இந்திய காங்கிரஸ் தலைமை 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இந்த குழுவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியது. இதன்மூலம் […]
தூத்துக்குடி மாவட்டம், புதூர் வட்டாரம், நாகலாபுரம் எஸ்.கே. கே.இந்து உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சசீலா அனுமதியுடன் மாணவ மாணவிகளை கொண்டு பள்ளி வளாகத்தில் புகையிலை விழிப்புணர்வு உறுதிமொழியும் தொடர்ந்து புகையிலை விழிப்புணர்வு பேரணியும் நடத்தப்பட்டது. முகாமை நாகலாபுரம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ரவீந்திரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தினகரன், வட்டாரம் சார்ந்த சுகாதார ஆய்வாளர்கள் சுந்தர்ராஜ், சீதாராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் டி.பி.சி. […]
திருநெல்வேலி அல்வா மிகவும் பிரபலமானதாகும். இந்த நிலையில் பல்வேறு கடைகளில் தரமற்ற அல்வா விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் வருகிறது. இதனால் நெல்லையில் உள்ள அல்வா கடைகளில் உணவுத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். நெல்லையப்பர் கோயில் மற்றும் ஜங்ஷன் பகுதிகளில் பல கடைகளில் ‘சுத்தமான நெய் அல்வா’ என்று லேபிள் ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், சோதனையில் அவர்கள் வெறும் நெய்யை மட்டும் பயன்படுத்தாமல், அதனுடன் டால்டா) மற்றும் கடலை எண்ணெய் […]
விமான விபத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை தவிர்க்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் விமான நிறுவனங்களுக்கு சிவில் விமான போக்குவரத்து துறை புதிய விதிகளை வகுத்தது. அதன்படி, ஒரு விமானி தொடர்ச்சியாக 18 மணி நேரம் பறக்கலாம் என்ற விதி 8 மணிநேரமாக குறைக்கப்பட்டது. வாரத்திற்கு 48 மணி நேரம் கட்டாயம் விடுமுறை வழங்கப்பட வேண்டும் உள்பட பல்வேறு புதிய விதிகள் விதிக்கப்பட்டன. இந்த விதிகளை பின்பற்றாத விமான நிறுவனங்களுக்கு அபராதம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை பாயும் […]
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் சூழலில், இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) கிழக்கு திசை காற்றின் ஊடுருவலால், டெல்டா, தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் இம்மாதத்தில் பருவமழை எப்படி இருக்கும்? என்ன மாதிரியான மழை நிகழ்வுகள் உருவாகும்? என்பது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமசந்தர் கூறியதாவது:- வருகிற 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை கிழக்கு திசை காற்றினால் தமிழ்நாட்டில் மீண்டும் மழைக்கான சூழல் ஆரம்பிக்கிறது. கடலோர மாவட்டங்களில் கன முதல் […]
கோவில்பட்டியில் உள்ள நாடார் நடுநிலைபள்ளிக்கூட வாகனம் பள்ளி முடிந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றது. மெயின்ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சில மாணவர்களை இறங்கி விட்டு, பெட்ரோல் பங்க் வழியாக பள்ளி வாகனம் மெயின் சாலைக்கு வந்தது. அப்போது கூசாலிபட்டியில் இருந்து பஸ் நிலையம் நோக்கி சென்ற தனியார் மினிபஸ் பள்ளி வாகனம் மீது மோதியது. இதில் பள்ளி வாகனத்தின் கண்ணாடி உடைந்து வாகனத்தில் இருந்த 4 மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவல் […]







