கோவில்பட்டி ஜே.சி.ஐ. 31வது தலைவராக ரகுபதி பதவி ஏற்பு ; செயலாளர் -செல்வலட்சுமி, பொருளாளர்- அருண்குமார்
கோவில்பட்டி ஜே.சி.ஐ.புதிய தலைவராக ரகுபதி பதவி ஏற்ற காட்சி.






ஜே.சி.ஐ.என்று அழைக்கப்படும் ஜூனியர் சேம்பர் இண்டர்நேஷனல் அமைப்பானது இளைஞர்களை தலைமைத்துவம், சமூகபொறுப்பு மற்றும் செயற்பாட்டு திறன்களில் வளர்க்கும் நோக்கத்தில் செயல்படும் அமைப்பு ஆகும்.
இந்தியாவில் 28 மாநிலங்களில் 28 மண்டலங்களாக ஜே.சி.ஐ. செயல்பட்டு வருகிறது/. 18 வது மண்டலத்தில் இடம்பெற்றுள்ள கோவில்பட்டியில் ஜே,சி.ஐ.அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது.

அதன்படி கோவில்பட்டி ஜே.சி.ஐ.அமைப்பின் 30-வது விருது இரவு மற்றும் 31 வது ஆட்சி மன்ற குழு பதவி ஏற்பு விழா ஜே.சிபவன் அரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. ஜே.சி.ஐ.தேசிய முன்னாள் தலைவர் ஆர்.ராஜா கோவிந்தசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ஜே.சி.ஐ.மண்டல தலைவர் கார்த்திக் போஸ்,துணை தலைவர் சீதாலக்சுமி கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். தொடக்கத்தில் கடந்த ஆண்டின் தலைவர் ஆர்.சூர்யா ஆண்டு அறிக்கை வாசித்தார். அவரது பதவிகாலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்,முகாம்கள்,நலத்திட்ட உதவிகள் வழங்கல் உள்ளிட்டவை பட்டியிலப்பட்டு இருந்தன.





அதை தொடர்ந்து கடந்த ஆண்டில் சிறந்த முறையில் பணியாற்றிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ஆர்.எஸ்.வெங்கடேஷ், எம்.செல்வலட்சுமி, ஸ்டீபன் நரேஷ்,மனோஜ்கண்ணன் , சுபஸ்ரீ, ஷாம்சுந்தர் ,சுதர்சன் சுரேஷ்,உதயலட்சுமி,சார்லஸ், முத்துசெல்வி, அனிதா ஆர்.முருகேஸ்வரி உள்ளிடோருக்கு சூர்யா அவரது மனைவி ஆகியோர் இணைந்து விருதுகளை வழங்கினார்கள்.
பின்னர் இந்த ஆண்டு முழுவதும் உடன் தலைவராக (2024ம் ஆண்டு தலைவர்) இருந்து வழிநடத்திய ஆர்.எஸ்.வெங்கடேஷ் தனது பதவிகாலத்தில் நிறைவேற்றிய சாதனைகளை நினைவு கூர்ந்தார். வேலை வாய்ப்பு முகாம் மூலம் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்றதை அறிவித்து கைதட்டலை பெற்றார்.

பின்னர் 2026 ம் ஆண்டுக்கான புதிய தலைவர் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில்பட்டி ஜே.சி.ஐ.அமைப்பின் 31-வது தலைவராக அறிவிக்கப்பட்டிருந்த என்.ரகுபதி அவரது மனைவியுடன் இசை முழக்கத்திற்கு இடையே விழா மேடைக்கு நடந்து வந்தார்.
அவருக்கு கடந்த ஆண்டின் தலைவர் சூர்யா பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதலில் அவர் உறுதிமொழியை வாசிக்க அதை ரகுபதி திரும்ப சொல்லி உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அதை தொடர்ந்து .தலைவர் பொறுப்புக்கான `காலர்’ மற்றும் `கேவல்’ ஆகியவற்றை சூர்யா வழங்க புதிய தலைவர் ரகுபதி பெற்றுக்கொண்டார்.



சிறப்பு விருந்தினர்கள் ராஜா கோவிந்தசாமி, கார்த்திக் போஸ் , சீதாலக்சுமி , கோவில்பட்டி ஜே/சி.ஐ. முன்னாள் தலைவர்கள் பார்த்திபன், சுந்தராஜன், ராஜ்குமார், ரத்தினகுமார், பிரவீன்குமார்,லட்சுமிவிக்னேஷ், ரவி மாணிக்கம், பிரசன்னா, முரளி கிருஷ்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்,. தலைவர் பதவி ஏற்ற ரகுபதிக்கு கோவில்பட்டி நேஷனல் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் பரமசிவன் உள்பட பலர் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.
தொடர்ந்து ஜே.சி.ஐ.செயலாளராக எம்.செல்வலட்சுமி, பொருளாளராக அருண்குமார்.இணை செயலாளர்களாக வர்ஷன், மனோஜ் கண்ணன், சுபஸ்ரீ, துணை தலைவர்களாக ஸ்வாதிகா, வினோத், ஷாம்சுந்தர்,.ஆனந்த், ரோஜர் அப்ரின்,சுதர்சன் சுரேஷ், இயக்குனர்களாக கற்குவேல் நிவாஸ், விகாஷ், கிறிஸ்டோபர், ஸ்ரீராம் பிரகாஷ், கற்குவேல் ராஜா, ராஜரத்தினம், மகேந்திரன், பிருங்கா,தீபலக்சுமி, ரத்னவேல்,தினகரன், ஹரிஹரன்,புல்லட்டின் எடிட்டராக வைரவிஷ்ணு ஆகியோர் பதவி ஏற்றனர்., இவர்களுக்கு தலைவர் ரகுபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பின்னர்ஜே.சி.ஐ.உறுப்பினர்களாக 18 பேர் புதிதாக சேர்ந்தனர்.அவர்களுக்கு மண்டல தலைவர் கார்த்திக் போஸ் பதவி பிரமாணம் செய்துவைத்தார். தொடர்ந்து பொருளாதரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் இருந்து 5 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள், 5 மாணவ மாணவிகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. ஜே.சி.ஐ.சார்பில் தலைவர் மற்றும் முன்னாள் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்கள் இணைந்து வழங்கினார்கள்.
தலைவர் பதவி ஏற்ற ரகுபதியை அறிமுகம் செய்து வைத்து முன்னாள் தலைவர் ராஜ்குமார் பேசுகையில்,” புதிய தலைவர் ரகுபதி தீப்பெட்டி தொழில் செய்து வருகிறார். அவர் மோட்டார் சைக்கிள் பயணத்தில் அதிக ஆர்வம் கொண்டவர் . கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை புல்லட் மோட்டார் சைக்கிளில் சென்று சாகசம் படைத்து இருக்கிறார். அவர் ஒரு பளுதூக்கும் வீரர், ஆணழகன் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகள் பெற்றுள்ளார். “ என்று குறிப்பிட்டார்.
தலைவர் பதவி ஏற்ற ரகுபதி பேசும்போது,” நான் கோவில்பட்டி ஜே.சி,ஐ.அமைப்பிற்கு இருக்கும் உரிமைகளை எந்த சமயத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டேன். மாதந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள், முகாம்கள் ,நலத்திட்ட உதவிகள் வழங்கல் போன்றவை நடத்தப்படும். கூடுதல் உறுப்பினர்கள் சேர்க்கையில் அதிக கவனம் செலுத்துவேன். பெண்களுக்கு மாதந்தோறும் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். உறுப்பினர்களின் திருமண நாளன்று கேக் வெட்டி கொண்டாடப்படும். குடும்ப சுற்றுலா நிச்சயம்உண்டு. அது வெளிநாடு சுற்றுலாவாக இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம் “ என்று கூறினார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ராஜா கோவிந்தசாமி பேசும்போது,” நன்கொடையாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு வசூல் செய்ய முயற்சி செய்யுங்கள். அதன் மூலம் கோவில்பட்டி ஜே.சி.பவன் கட்டிடத்தில் மேல் மாடிகட்டி அதில் தமிழ்நாடு அரசு பணி தேர்வுக்கான பயிற்சி மையம் ஏற்படுத்தலாம். இது இளைஞர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் “ என்று கேட்டுக்கொண்டார்.
.விழா நிகழ்ச்சிகளை ஜே.சி.ஐ. முன்னாள் தலைவர் பிரசன்னா மற்றும் கவிஞர் முருகேஸ்வரி ஆகியோர் தொகுத்து வழங்கினர். விழாவில் கோவில்பட்டி டாக்டர் சஞ்சய், ரோட்டரி கிளப் துணை தலைவர் முத்துமுருகன், ஜே.சி.ஐ, மண்டல துணை தலைவர் அனிசியா ஜான், மார்த்தாண்டம் ஜே.சி.ஐ.தலைவர் அனுஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா முடிவில் ஜே.சி.ஐ.செயலாளர் எம்.செல்வலட்சுமி நன்றி கூறினார்.







