கோவில்பட்டி ஜான் போஸ்கோ பள்ளி 53வது ஆண்டு விழா
கோவில்பட்டி ஜான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 53வது ஆண்டு விழா நகர்மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில் பள்ளி முதல்வர் மரிய செல்வமணி முன்னிலையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக புனித சூசையப்பர் ஆலய உதவி பங்கு தந்தை குழந்தைராஜ் அடிகளார்,விவேக் நர்சரி பள்ளி தாளாளர் காமராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள் ஏஞ்சலா சின்னத்துரை, ஜாஸ்மின் லூர்து மேரி, உலக ராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டு இப்பள்ளியில் பயின்ற பிளஸ் 2 தேர்வில் இப்பள்ளியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பொன்னாடை அணிவித்து ரொக்க பரிசு மற்றும் ,சான்றுகளும் வழங்கப்பட்டது
.தேசிய அளவிலும்,மாநில அளவிலும் நடைபெற்ற சிலம்பம் போட்டிகளில் கலந்து கொண்டு முதலிடத்தில் வெற்றி பெற்ற இப்பள்ளி மாணவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வெற்றி கோப்பையும் வழங்கி கவுரவப்படுத்தப்பட்டார்கள்.
விழா முடிவில் மாணவ மாணவியர்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது . அருட்சகோதரிகள்,இருபால் ஆசிரியர்கள்,பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.







