கோவில்பட்டி எஸ்.எஸ்.டி.எம். கல்லூரியில் மனநல விழிப்புணர்வு கருத்தரங்கம்

கோவில்பட்டி எஸ். எஸ். துரைச்சாமி நாடார் மாரியம்மாள்(எஸ்.எஸ்.டி.எம்) கல்லூரியில் மனநல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார், கல்லூரி குழு உறுப்பினர்கள் அருண்குமார். ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கல்லூரி முதல்வர் செல்வராஜ் வரவேற்று பேசினார்,.சென்னை ராமச்சந்திரா கல்லூரியில் உளவியல் துறையில் பயிலும் மாணவிகள் கிரிபாலா, ஷர்நிதா, சாய் ஸ்மிருதி மற்றும் அனு ஆகியோர் கலந்து கொண்டு `ஸ்டிக்மா தெரபி’ குறித்த விழிப்புணர்வு உரைகளை வழங்கினர்.
மனநலத்துடன் தொடர்புடைய தவறான நம்பிக்கைகள், சமுதாயத்தில் காணப்படும் மனநல அவமதிப்பு (Stigma), மற்றும் அதை தகர்க்கும் உளவியல் அணுகுமுறைகள் குறித்து மாணவர்களுக்கு தெளிவான விளக்கங்களை அவர்கள் அளித்தனர், மேலும் மாணவ, மாணவிகளின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தனர்,.
கருத்தரங்கில் 200 மாணவர்-மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் வணிக நிர்வாகவியல் துறை பேராசிரியர் ஸ்ருதி நன்றி கூறினார்,







