மாநில அறிவியல் போட்டி: கோவில்பட்டி நகராட்சி பள்ளி மாணவர்கள் 2 பேர் முதல் பரிசு பெற்று சாதனை
திண்டுக்கல்லில் மாநில அளவில் 34வது குழந்தைகள் அறிவியல் மாநாடு நேற்று நடைபெற்றது. மாநாட்டில் மாநிலம் முழுவதிலும் வந்திருந்த மாணவ, மாணவிகள் சார்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டது. 132 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கபட்டதில் 30 ஆய்வுக் கட்டுரைகள் இந்திய அளவில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டன.
இப்போட்டியில் கோவில்பட்டி காந்திநகர் நகராட்சி உயர்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவர்கள் மு.கணேஷ்குமார் மற்றும் கோ. ராகவன் ஆகியோர் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து கலந்து கொண்டு மாநில அளவில் முதல் பரிசு பெற்று இந்திய அளவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

மாநில அறிவியல் போட்டியில் பங்கேற்று சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த அறிவியல் ஆசிரியர் அப்பணசாமி ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியர் ஜேஸ்மின் ஜெனிபர் சொர்னபாய், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினர்







