கோவில்பட்டியில் தென் மாநில லத்தி ஸ்போர்ட்ஸ்; மகாராஷ்டிரா அணி `சாம்பியன்’ பட்டம் வென்றது

லத்தி ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் ஆப் தமிழ்நாடு மற்றும் பாரத் லத்தி ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் ஆகியவை இணைந்து நடத்திய தென் மாநில அளவிலான லத்தி ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் 2025 ஆம் ஆண்டுக்கான போட்டி, கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோட்டில் தனியார் திருமண மண்டபத்தில் 2 நாட்கள் நடந்தன.
இப்போட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி கிளப் தலைவர் ராஜ்குமார், தொழிலதிப பவுன் மாரியப்பன் ஆகியோர் தலைமை தாங்கினர். மகாராஷ்டிரா,பாரத் லத்தி ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் பொதுச்செயலர் ஜாம்பாஜி, பாண்டிச்சேரி பாரத் லத்தி ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் தலைவர் ரகுமான் சேத்து ஆகியோ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினர். தொழிலதிபர்கள் அமலி அ. பிரகாஷ், வெற்றி ஆகியோர் போட்டிகளை தொடக்கி வைத்தனர்.

புதுச்சேரி, தமிழ்நாடு, ஒடிசா, மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 120 பேர் கலந்து கொண்டனர். 8 வயது முதல் 12 வயது, 12-18, 18-25 மற்றும் 25 வயதுக்கு மேற்பட்டோர் என 4 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை மகாராஷ்டிரா மாநில அணியினர் தட்டிச் சென்றனர். புதுச்சேரி அணியினர் 2 ம் இடத்தையும், தமிழ்நாடு அணியினர் 3 ம் இடத்தையும் பிடித்தனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற அணியினருக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

தமிழ் கல்ச்சுரல் யோகா மற்றும் ஸ்போர்ட்ஸ் டிரஸ்ட் தலைவர் அழகுதுரை, தமிழ்நாடு யோகா ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அசோசியேசன் பொருளாளர் கரிகாலன், தொழிலதிபர் பெனட், லத்தி ஸ்போர்ட்ஸ் அசோசியேசன் ஆப் தமிழ்நாடு பொதுச்செயலாளர் மாரியப்பன் மற்றும் அதிமுக., ஒன்றிய செயலாளர் போடுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.







