நாகலாபுரத்தில் ” புகையிலை விழிப்புணர்வு” பேரணி
தூத்துக்குடி மாவட்டம், புதூர் வட்டாரம், நாகலாபுரம் எஸ்.கே. கே.இந்து உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சசீலா அனுமதியுடன் மாணவ மாணவிகளை கொண்டு பள்ளி வளாகத்தில் புகையிலை விழிப்புணர்வு உறுதிமொழியும் தொடர்ந்து புகையிலை விழிப்புணர்வு பேரணியும் நடத்தப்பட்டது.

முகாமை நாகலாபுரம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ரவீந்திரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தினகரன், வட்டாரம் சார்ந்த சுகாதார ஆய்வாளர்கள் சுந்தர்ராஜ், சீதாராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் டி.பி.சி. களப்பணியாளர்கள், பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.







