தென்மண்டல அளவிலான கபடி போட்டி மதுரை பாலமேட்டில் நடைபெற்றது இப்போட்டியில் சிவகாசி ரெங்கநாயகி வரதராஜ் பொறியியல் கல்லூரி கபடி அணி 8 ம் இடம் பெற்று ரூ 6 ஆயிரம் காசோலை மற்றும் சுழற் கோப்பை பரிசாக பெற்றனர். வெற்றி பெற்ற அணியின் வீரர்களையும் பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் விஜயகுமார் மற்றும் தங்க மாரியப்பன் ஆகியோரை கல்லூரி சேர்மன் ராகவன்,துணை சேர்மன் பிருந்தாராகவன், முதல்வர் குமார் டீன் மோதிலால் ஆகியோர் பாராட்டினார்கள்.
குரூப் 2,2A தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு; 10-ந்தேதி நடக்கிறது
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 645 காலிப் பணிகளுக்கான TNPSC Group-II & II-A முதல்நிலை தேர்வு 28.09.2025 அன்று நடத்தப்பட்டது. ] TNPSC Gr-2/2A முதன்மைத் தேர்வுக்கு ( MAINS) தயாராகும்&
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பெருமாள்புரம் கூலத்தெருவைச் சேர்ந்தவர் முத்து மகேஷ். இவரது மனைவி பால அமுதா (வயது 45). கடந்த 2-ந் தேதி முத்து மகேஷ் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த நடிகர் ஜி.பி.முத்துவின் மகன்கள், சைக்கிளில் இருபுறமும் சென்றனர். சாலையின் இருபுறமும் ஏன் சைக்கிள் ஓட்டுகிறீர்கள், ஒருபுறமாக ஓட்டுங்கள் என்று முத்து மகேஷ் கூறினாராம். இதுகுறித்து ஜி.பி.முத்துவிடம், அவரது மகன்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஜி.பி.முத்து, அவரது மனைவி […]
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் 2026ஐ முன்னிட்டு தூத்துக்குடி மற்றும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், இன்று (04.11.2025) பார்வையிட்டார். இது பற்றி ஆட்சியர் இளம்பகவத் கூறியதாவது :- இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் இன்று (4.11.2025) முதல் 4.12.2025 வரை நடைபெறவுள்ளது. நமது […]
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன். அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்ற இவர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளராக இருந்து வந்தார். இந்நிலையில், மனோஜ் பாண்டியன் இன்று திமுகவில் இணைந்தார். அண்ணா அறிவாலயம் சென்ற மனோஜ் பாண்டியன் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அப்போது திமுக பொதுசெயலாளர் துரைமுருகன், துணை பொதுசெயலாளர் கனிமொழி மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் மனோஜ் பாண்டியன் கூரியதாவது:- வேறொரு இயக்கத்தை […]
கோவில்பட்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணம் திருவிழா இன்று கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி, திருவனந்தல் பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. பின்னர் கொடி பட்டம் 4 ரதவீதிகளையும் சுற்றி எடுத்துவரப்பட்டது. 5.30 மணிக்கு மேல் அம்மன் சன்னதி முன்பு உள்ள கொடிமரத்தில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரம், நந்தியம்பெருமான், பலிபீடம் ஆகியவற்றுக்கு சிறப்பு அபிஷேகங்கள் […]
தமிழ்நாடு முழுவதும் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் இன்று (செவ்வாய்கிழமை) தொடங்கி உள்ளது. ஆளுங்கட்சி உள்பட பெரும்பாலான கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், எந்தவித தவறும் நடக்காது என தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது. சிறப்பு வாக்காளர் திருத்தப் பணியின்போது பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விவரங்கள் வருமாறு:- * வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இன்று முதல் (4-ந் தேதி) முதல் டிசம்பர் 4-ந் தேதி வரை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று தற்போதுள்ள வாக்காளர்களின் […]
கோவையில் தனியார் கல்லூரியில் படித்து வரும் மதுரையை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி ஒருவர், கோவை விமான நிலையம் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் ஆண் நண்பருடன் காரில் இருந்த போது மொபட்டில் வந்த 3 பேர் 3 பேர் ஆண் நண்பரை தாக்கி அரிவாளால் வெட்டி சாய்த்தனர்,. பின்னர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பினர்.. இந்த கொடுஞ்செயல் தொடர்பாக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட […]
10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (செவ்வாய் கிழமை) காலை வெளியிட்டார். இதன்படி 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முழு விவரம் வருமாறு:-
பிரசித்தி பெற்ற கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா 4-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) தொடங்கி 15ந் தேதி முடிவடைகிறது, நிகழச்சி விவரம் வருமாறு:- 1 வது நாள்: 4.11.2025 ரேவதி நட்சத்திரம் சித்த யோகமும் கூடிய சுபதினத்தில் காலை 5.30 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் துலா லக்கனத்தில் கொடியேற்றுதல் மண்டகப்படிதாரர் : திருக்கோயில். இரவு 7.30 மணிக்கு புஷ்ப சப்பரத்தில் அம்மன் திருவீதி உலா மண்டகப்படிதாரர் : பிராமணாள் சமூகம், கோவில்பட்டி . […]







